மும்பை:

முத்தலாக் மூலம் மனைவியை விவாகரத்து செய்யும் கணவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிப்பது உள்ளிட்ட பல அம்சங்களை கொண்ட முத்தலாக் முறையை ஒழிக்க லோக்சபாவில் மசோதா நிறைவேற்றப்பட்டது. எனினும் ராஜ்யசபாவில் எதிர்ப்பு இருப்பதால் இந்த மசோதா கிடப்பில் உள்ளது.

மத்திய அரசின் இச்சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் அனைத்திந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் சார்பில் கடந்த மாதம் பேரணி நடைபெற்றது. இதையடுத்து இஸ்லாமிய தனிசட்டத்தில் அரசின் தலையீடு கூடாது என வலியுறுத்தி மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் இன்று இஸ்லாமிய பெண்கள் பேரணி நடத்தினர். இதில் ஏராளமான இஸ்லாமிய பெண்கள் கலந்துகொண்டனர்