கொல்கத்தா
ஆன்மீக தலைவரை கைது செய்த வங்கதேசத்துக்கு எதிராக இஸ்கான அமைப்பினர் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்தியா தொடர்ந்து வங்க தேசத்தில் உள்ள இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மை மக்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசுக்கு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில் வங்கதேசத்தின் தேசிய கொடியை அவமதித்ததாக கூறி, அந்நாட்டில் உள்ள இந்து மத அமைப்பின் ஆன்மிக தலைவர் சின்மய் கிருஷ்ண தாஸ் கைது செய்யப்பட்டார். இந்து அமைப்பினர் இதற்கு கண்டனம் தெரிவித்து வங்காளதேசத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், வங்காளதேசத்தில் இந்து மத அமைப்பின் தலைவர் மீதான கைது நடவடிக்கை கவலையளிப்பதாகவும், அந்நாட்டில் உள்ள இந்துக்கள் மற்றும் அனைத்து சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு வங்காளதேச இடைக்கால அரசாங்கத்தை கேட்டுக்கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆன்மிக தலைவர் சின்மய் கிருஷ்ண தாஸ் மீதான கைது நடவடிக்கைக்கு வங்காளதேச அரசை கண்டிக்கும் விதமாகவும், அவரை விடுதலை செய்யக்கோரியும் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ‘இஸ்கான்’ அமைப்பினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இஸ்கான் அமைப்பின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், வங்காளதேசத்தில் உள்ள சிறுபான்மையினர், அதிலும் குறிப்பாக இந்துக்களின் நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதாக தெரிவித்துள்ளார்.