பைனான்ஸ் சிக்கலால் நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ‘அயலான்’ படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் தொடங்கியது.

ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீதி சிங், இஷா கோபிகர், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இந்தப் படத்தை 24 ஏ.எம். நிறுவனம் தயாரித்து வந்தது.

இந்த படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளனர்.

அயலான் படத்தின் போஸ்ட் ப்ரொடுக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.கிராபிக்ஸ் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தற்போது இந்த ஷூட்டிங்கில் இஷா கோபிகர் இணைந்துள்ளாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் படத்தின் ஆக்ஷன் காட்சிகள் உருவாக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

https://www.instagram.com/p/CIcSzLUn2em/