திரைப்பாடலாசிரியர் வைரமுத்து, ஆண்டாள் குறித்து அவதூறாக எழுதியதாக இந்துத்துவவாதிகள் தொடர்ந்து மிரட்டல் விடுத்தும், கீழ்த்தரமாக விமர்சித்தும் வருகிறார்கள்.
இந்த நிலையில், வைரமுத்துவுக்க எதிரான மிரட்டல்களையும் அச்சுறுத்தல்களையும் கண்டித்து முப்பதுக்கும் மேற்பட்ட தமிழ்ப் படைப்பாளிகள் ஓர் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள்.
நல்ல விசயம்தான்.
ஆனால் அதில், “திருப்பாவை திருவம்பாவையை எழுதியது ஆண்டாள்” என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆண்டாள் பாடியது திருப்பாவை. வைணவ சமயத்துக்கானது. திருவெம்பாவை என்பது சைவ சமயத்தைச் சேர்ந்த மாணிக்க வாசகர் இயற்றியது.
“முக்கியமான அறிக்கையில் எப்படி இதுபோன்ற தவறு இருப்பதை கவனிக்காமல் விட்டார்கள். எதிர்க்கருத்து கொண்டவர்கள், விசயத்தைவிட்டுவிட்டு இந்த தவறையே குறிப்பிட்டு விமர்சிப்பார்களே” என்று வருந்துகிறார்கள் படைப்பாளிகள்.