வாஷிங்டன்

முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்பின் மனைவி மெலானியா விவாகரத்து செய்ய உள்ளதாக டிரம்ப் உதவியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 

நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் 290 இடங்களில் வென்ற ஜோ பைடனிடம் டொனால்ட் டிரம்ப் தோல்வி அடைந்துள்ளார். டிரம்ப்பின் முன்றாம் மனைவியான மெலானியா அவரை விட 25 வயது இளையவர் ஆவார்.

மெலானியா விரைவில் டிரம்ப்பை விவாகரத்து செய்ய உள்ளதாக ஜீ நியூஸ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.   இது குறித்து டிரம்பின் முன்னாள் உதவியாளர் ஸ்டீபனி ஏற்கனவே டிரம்ப் மற்றும் மெலானியாவின் மகன் போரனுக்கு சொத்தில் சம பங்கு வழங்குவது குறித்து பேச்சு வார்த்தை நடப்பதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும் இன்னொரு உதவியாளர் ஓமரோசா இவர்கள் இருவரின் 15 ஆண்டு கால திருமண பந்தம் முடிவடைந்துள்ளதாகவும். டிரம்ப் பதவியில் இருந்து வெளியேறினால் விவாகரத்து செய்ய மெலானியா காத்திருந்ததாகவும் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியில் இருக்கும் போது மெலானியா விவாகரத்துக்கு முயன்றால் டிரம்ப் அவரை தண்டிக்க முற்படுவார் என கருதுவதாகவும் ஊகங்கள் தெரிவிக்கின்றன.   இதுவரை அதிகாரபூர்வ தகவல்கள் ஏதும் இது குறித்து வெளியாகவில்லை.