பாக்தாத்
அமெரிக்க விமானப்படைத் தாக்குதலில் ஈரான் நாட்டின் ராணுவ தளபதி காசிம் சோல்மணி கொல்லப்பட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
கடந்த வாரம் இராக்கில் அமெரிக்க ராணுவத்தின் மீது ஈரான் நாட்டு படைகள் நடத்திய தாக்குதலில் அமெரிக்க ராணுவத்தினர் கொல்லப்பட்டனர். இதற்குப் பதிலடி தாக்குதலை அமெரிக்க நடத்தியதில் 25 வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்கத் தூதரகம் முன்பு ஏராளமான இஸ்லாமிய இயக்க ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வன்முறையில் ஈடுபட்டனர். அவர்களை அமெரிக்க ராணுவ வீரர்கள் கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசி கலைத்தனர்.
இதையொட்டி பாக்தாத் விமான நிலையத்தில் இன்று அதிகாலை அமெரிக்க ராணுவம் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தியது அந்த தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதி சோல்மணி வந்த விமானம் தாக்குதலுக்கு உள்ளாகியது.
அதில் சோல்மணி மற்றும் அவரது ஆதரவாளர்களான அபுஅகதி அல் முகந்திஸ் உள்ளிட்ட ஆறு பேர் கொல்லப்பட்டதாக அமெரிக்க ராணுவம் அறிவித்துள்ளது.
ஈரான் நாட்டின் முக்கிய ராணுவ தளபதியாகப் பொறுப்பேற்று வந்தவர் காசிம் சோல்மணி ஆவார். ஈரான் நாட்டின் முக்கிய தலைவரான ஆயதுல்லா கோமேனிக்கு அடுத்த அதிகாரத்தில் காசிம் சோல்ம்ணி இருந்து வந்தார்.