மும்பை:
ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.

இதையடுத்து களமிறங்கிய லக்னோ அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்தது. இந்த அணியில் கே.எல்.ராகுல் அதிகபட்சமாக 68 ரன்களும், தீபக் ஹோடா 51 ரன்களும் எடுத்தனர்.

லக்னோ அணி பந்து வீச்சாளர்களில் வாஷிங்டன் சுந்தர், செப்பர்ட் நடராஜன் ஆகியோர் தலா 2 விக்கெட்டை எடுத்தனர்.

170 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய ஹைதராபாத் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. இந்த மூலம் லக்னோ அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐபில் தொடரில் நாளை இரவு 7.30 மணிக்கு நடக்க உள்ள போட்டியில் கொல்கத்தா – மும்பை அணிகள் மோத உள்ளன.