ஐதராபாத்
இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுவதையொட்டி தெலுங்கான அரசு அனைத்து பெண் ஊழியர்களுக்கும் விடுமுறை அளித்துள்ளது.
உலகெங்கும் மார்ச் 8 ஆம் தேதி அன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பல தலைவர்கள் வாழ்த்துச் செய்திகள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் குடியரசுத் தலைவர், பிரதமர், துணை குடியரசுத் தலைவர், மாநில முதல்வர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் சர்வதேசம் மகளிர் தினத்தை முன்னிட்டு தெலுங்கானா அரசு தலைமைச் செயலாளர் சோமேஷ் குமாருக்கு அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவின்படி முதல்வர் அலுவலகம் ஒரு செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளது.
அதில் அனைத்து பெண் ஊழியர்களுக்கும் மார்ச் 8 ஆம் தேதி சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு விடுமுறை என அரசு அறிவிப்பதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும் முதல்வர் சந்திரசேகர் ராவ் மக்கள் தொகையில் 50% உள்ள பெண்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் பல சாதனைகளை நிகழ்த்துவர் எனத் தெரிவித்துள்ளார்.