பெங்களூரு

கொலை வழக்கில் கைதான கன்னட நடிகர் தர்ஷனுக்கு இடைக்கால ஜாமீன் வ்ழங்கப்பட்டுள்ளது

பிரபல கன்னட நடிகரான தர்ஷன் தனது ரசிகரான சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமியை கொலை செய்த வழக்கில் காமாட்சிபாளையா போலீசாரால் கைது செய்யப்பட்டு பல்லாரி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே தர்ஷன் ஜாமீன் கேட்டு கோரி பெங்களூரு சிட்டி சிவில் மற்றும் செசன்சு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

எனவே தர்ஷன் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்தார் கடந்த 22  அன் தேதி இந்த மனு விசாரணைக்கு ஏற்று கொள்ளப்பட்டபோது நீதிபதி விசாரணையை 28-ந்தேதிக்கு (நேற்று முன்தினம்) ஒத்திவைத்தார். நேற்று முன்தினம் இந்த மனு நீதிபதி விஸ்வஜித் ஷெட்டி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பு வக்கீல் ஆட்சேபனை தெரிவிக்க கால அவகாசம் வழக்கும்படி கூறியதை ஏற்று நீதிபதி 29 ஆம் தேதிக்கு (அதாவது நேற்று) விசாரணையை ஒத்திவைத்தார்.

நேற்று தர்ஷன் ஜாமீன் மனு மீதான விவாதம் நடந்தபோது வழக்கறிஞர் சி.பி.நாகேஷ்,

“மனுதாரர் தர்ஷனுக்கு முதுகு தண்டு வடத்தில் பாதிப்பு உள்ளது. சிகிச்சை பெறவில்லை என்றால் சிறுநீரகம் வரை பாதிக்க வாய்ப்பு உள்ளது. உடனே அவர் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். அவர் மைசூரு அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற விரும்புகிறார். சாட்சிகளை அளிக்க முயற்சிக்க மாட்டார். எனவே அவருக்கு இடைக்கால ஜாமீன் வழக்க வேண்டும்

எனக் கேட்டுக் கொண்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஜாமீன் மனு மீதான விசாரணையை இன்றைக்கு (புதன் கிழமை) ஒத்திவைத்து உத்தரவிட்டிருந்தார். இன்று கொலை வழக்கில் கைதான கன்னட நடிகர் தர்ஷனுக்கு 6 வாரம் இடைக்கால ஜாமீன் வழங்கி கர்நாடக உயர்நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.