லண்டன்: பிரிட்டன் பிரதமராக இந்திய வம்சாவழியைச் சேர்ந்த ரிஷி சுனக் பதவி ஏற்றுள்ள நிலையில், அவருக்கு இன்போசிஸ் நாராயண மூர்த்தி நெகிழ்ச்சியுடன் வாழ்த்து தெரிவித்து உள்ளார். நாங்கள் பெருமைப்படுகிறோம் என குறிப்பிட்டுள்ளார். இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தியின் மருமகன்தான் ரிஷி சுனக் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரிட்டன் வரலாற்றில் முதன்முறையாக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக், பிரதமராக போட்டியின்றி தேர்வாகி இருக்கிறார். 42வயது நிரம்பிய நாட்டின் இளம் பிரதமர் என்ற பெருமையும் பெற்றிருக்கிறார். அவருக்கு அரசர் சார்லஸ் பதவி பிரமாணம் செய்து வைத்தார். அவருக்கு இந்திய பிரதமர் மோடி உள்பட உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ரிஷி சுனக்கின் மாமனாரான இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தி, மருமகன் என்கிற முறையில் இங்கிலாந்து பிரதமராக பதவியேற்கும் ரிஷி சுனக்கினை வாழ்த்தி இருக்கிறார், அவரது வாழ்த்து செய்தியில் ,‘’ரிஷிக்கு எனது வாழ்த்துக்கள். அவர் இங்கிலாந்து பிரதமர் ஆவதால் நாங்கள் பெருமை அடைகிறோம். அவர் மேலும் வெற்றி பெற வாழ்த்துகிறோம் . அவர் நிச்சயம் இங்கிலாந்து நாட்டு மக்களுக்கு நல்லதை செய்வார்’’ என்று தெரிவித்துள்ளார்.
இந்திய வம்சாவழியைச் சேர்ந்தவர் ரிஷி சுனக், அவரது . பெற்றோர் வழி தாத்தாக்கள் இந்தியாவில் பஞ்சாப் மாகாணத்தில் பிறந்தவர்கள். இந்தியாவை பூர்விகமாக கொண்ட ரிஷி சுனக்கின் பெற்றோர்கள் இருவரும் 1960 ஆம் ஆண்டுகளில் கிழக்கு ஆப்பிரிக்காவில் இருந்து இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்துள்ளார்கள். இவரது மனைவி அக்சதாவும் இந்தியா வம்சாவழியை சேர்ந்தவர்தான். இவர், முன்னணி மென்பொருள் நிறுவனமான இன்போசிஸ் தலைவர் நாராயண மூர்த்தியின் மகள் இவர்களுக்கு கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் ஆனது.. இத்தம்பதிக்கு கிருஷ்ண, அனுஷ்கா என்று இரு மகள்கள் உள்ளனர். ரிஷி சுனக் தனது மனைவி, குழந்தைகளுடன் அடிக்கடி பெங்களூருக்கு வந்து செல்வது வழக்கம் .
மருகன ரிஷி சுனக் இங்கிலாந்து பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளதால் நெகிழ்ந்து போயிருக்கிறார் நாராயண மூர்த்தி.