ஆந்திரா அரசியலில் ஒய்.எஸ். ஆர். ரெட்டி மற்றும் சந்திரபாபு நாயுடு இருவருமே முக்கியமான தலைவர்கள்.

இவர்களை பற்றிய வெப் சீரிஸ் ஒன்று ராஜ் இயக்க, திருமால் ரெட்டி மற்றும் விஷ்ணு வர்தன் இந்தூரி இணைந்து தயாரிக்கவுள்ளதாகவும் கடந்த சில தினங்களுக்கு முன்பு செய்திகள் வெளியானது.

இந்நிலையில் இயக்குநர் தேவ் கட்டா இந்த கதையை தான் ஏற்கெனவே பல்வேறு வடிவங்களில் பதிவு செய்து வைத்திருந்ததாகவும், அதை தயாரிப்பாளர் விஷ்ணு இந்தூரி காப்பியடித்து விட்டதாகவும் தனது ட்விட்டர் பதிவில் குற்றம்சாட்டியிருந்தார்.

‘இந்திரப்ரஸ்தம்’ எனும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தேவ் கட்டா வெளியிட்டுள்ளார்.‘இந்திரப்ரஸ்தம்’ படத்தை வி.ஹர்ஷா மற்றும் சி.தேஜா இணைந்து தயாரிக்கவுள்ளனர்.