டோக்கியோ: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக்  போட்டியில் இன்று காலை நடைபெற்ற   மல்யுத்தம் போட்டியில் இந்திய வீரர்கள்  ரவி தாகியா, தீபக் புனியா ஆகியோர் அரை இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம் அடைந்துள்ளனர். இதனால் இந்தியாவுக்கு மேலும் பதக்கம் கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

32 வது ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 23ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.  இந்த போட்டிகளில் உலக நாடுகளைச் சேர்ந்த  11,000 மேற்பட்ட வீராங்கனைகள், வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.   இந்தியா சார்பில் 127 வீரர் வீராங்கனைகள் 18 போட்டிகளில் கலந்துகொண்டு ஆடி வருகின்றனர்.

11வது நாளாக இன்று பல்வேறு போட்டிகள் நடைபெறுகின்றன. இன்று காலை நடைபெற்ற   ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டியில் இந்திய வீரர்கள் ரவி தாகியா, தீபக் புனியா ஆகியோர் அரையிறுத்தி சுற்றுக்கு முன்னேறினர்.

57 கிலோ மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் ரவி தாகியா  கொலம்பிய வீரர் டைகரஸ் அர்பேனோவை 13-2 என்று வீழ்த்தி காலிறுதிக்குத் தகுதி பெற்றார், தொடர்ந்து, ரவிக்குமார்  பல்கேரிய கிராப்லரை எளிதாக வீழ்த்தினார். 14-4 என்ற கணக்கில்  வீழ்த்தி, அரை யிறுத்திப்போட்டிக்குள் நுழைந்தார்.

86கிலோ எடைப்பிரிவுவில் இந்தியவீரர் தீபக் புனியா நைஜீரியா வீரர் எகிரிகெரினியை 12-1 என்று ஆதிக்கம் செலுத்தினார். தொடர்ந்து, 6-3 என்ற கணக்கில் சீன வீரர்சூஷென் லின்   தோற்கடித்து அரையிறுதிப் போட்டிக்குள் நுழைஙந்தார். இதனால், இந்தியாவுக்கு மேலும் சில பதக்கங்கள் கிடைப்பது உறுதியாகி உள்ளது.

அதே போல் மற்றொரு மகளிருக்கான மல்யுத்த போட்டியில்  அன்ஷு மாலிக் தோல்வியுற்றார். ஆனால் அன்ஷு மாலிக்கிக்கிற்கு இன்னும் ஒரு வாய்ப்பு உள்ளது.

டோக்கியோ ஒலிம்பிக் ஈட்டி எறித இந்தியாவின் நீரஜ் சோப்ரா  இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.  இவரை எதிர்த்து ஆடிய குரக்கினா என்பவர் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினால் இவருக்கு ரெபஜா சுற்றில் வாய்ப்புள்ளது.