ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகைகளை முன்னிட்டு 6000 சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே துறை திட்டமிட்டுள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவா தெரிவித்துள்ளார்.

துர்கா பூஜை, தீபாவளி மற்றும் சத் திருவிழாக்கள் வடமாநிலங்கள் குறிப்பாக பீகார், உத்தரபிரதேசம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் விமரிசையாக கொண்டாடப்படும் பண்டிகைகளாகும்.

அக்டோபர் 9ம் தேதி துர்கா பூஜை துவங்கும் நிலையில் அக்டோபர் 31ம் தேதி நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

இதையடுத்து நவம்பர் 7 மற்றும் 8ம் தேதிகளில் சாத் பூஜை நடைபெறுகிறது.

கடந்த ஆண்டு இதே பண்டிகை நேரத்தில் 4,429 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன.

இந்த பண்டிகை காலகட்டத்தில் ஒரு கோடிக்கும் அதிகமான வடமாநில தொழிலாளர்கள் ரயில்கள் மூலம் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்கின்றனர்.

அதனால் இந்த ஆண்டு 6000 சிறப்பு ரயில்களை இயக்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது. அதற்காக ரயில்வே துறை 12,500 பெட்டிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது.

இந்த தகவலை பத்திரிகையாளர்களிடம் தெரிவித்த ரயில்வே அமைசாசர் அஷ்வினி வைஷ்ணவா கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 1500 கூடுதல் சிற்ப்பு ரயில்கள் இயக்கப்படுவதாகவும் இதுவரை 5975 சிறப்பு ரயில்கள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.