டில்லி
மணிக்கு 130 கிமீ வேகத்துக்கு மேல் செல்லும் ரயில்களில் சாதாரண படுக்கை பெட்டி நீக்கப்பட்டு குளிர் சாதன வசதி படுக்கை பெட்டிகள் அதிகரிக்கப்பட உள்ளது.
இந்திய ரயில்வே அதிவேகமாக ஓடும் ரயில்கள் சேவையை அதிகரித்து வருகிறது. குறிப்பாக தற்போது டில்லி – மும்பை மற்றும் டில்லி –கொல்கத்தா மார்க்கத்தில் மணிக்கு 160 கிமீ வேகம் வரை செல்லக்கூடிய அளவுக்கு உள்கட்டமைப்பு பணிகளை ரயில்வே செய்து வருகிறது. இந்த பணி வரும் 2023 ஆம் வருடம் முடிவடைகிறது.
அதன் பிறகு மணிக்கு 130 கிமீ வேகத்துக்கு மேல் செல்லும் அதிவேக ரயில்களில் சாதாரண படுக்கை பெட்டிகள் நீக்கப்பட உள்ளன. அதற்குப் பதிலாகக் குளிர்சாதன வசதி கொண்ட படுக்கை பெட்டிகள் அதிகரிக்கப்பட உள்ளன.
இந்திய ரயில்வே அனைத்து பாதைகளையும் படிப்படியாக அதிவேக ரயில் போக்குவரத்துக்கு ஏற்ற வகையில் மாற்ற திட்டமிட்டுள்ளது. ஆகவே எதிர்காலத்தில் சாதாரண படுக்கை பெட்டிகள் நீக்கப்பட்டு முழுவதுமாக குளிர்சாதன வசதி படுக்கை பெட்டிகள் மட்டுமே இருக்கும் எனக் கூறப்படுகிறது.