சென்னை: அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற்று முடிந்து, வெற்றியாளர்கள் விவரமும் வெளியாகி உள்ள நிலையில், இந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற இந்திய வம்சாவளியினர் குறித்த தகவல்களும் வெளியாகி உள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற்று நேற்று (நவம்பர் 6ந்தேதி) வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில், குடியரசு கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபர் டிரம்ப் மீண்டும் போட்டியிட்டார். அவரை எதிர்த்து போட்டியிட்ட, தற்போதைய துணை அதிபரும், இந்திய வம்சாவழியைச் சேர்ந்தவருமான ஜனநாயக கட்சி வேட்பாளராக முன்னாள் துணைஅதிபர் கமலாஹாரிஸ் களமிறங்கினார் இருவருக்கும் இடையே கடுமையான போட்டிகள் நிலவியது. இதில், டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். கமலா ஹாரிஸ் தோல்வியை தழுவினார்.
இந்த நிலையில், அமெரிக்க தேர்தலையொட்டி, முப்பதுக்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கர்கள் உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் மாநில சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிட்டுள்ளனர். அவர்களில் சிலர் வெற்றியும் ஈட்டி கவனத்தை ஈர்த்துள்ளனர். அவர்கள் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.
ரோ கண்ணா :
இவர், கமலாஹாரிஸ் கட்சியான ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர். இவர் அமெரிக்க செனட்சபைக்கு போட்டியிட்டார். இவர் வெற்றி பெற்றுள்ளார். டிரிம்பின் குடியரசு கட்சி வலுவாக உள்ள இந்த மாவட்டத்தில், அந்த கட்சியின் வேட்பாளரான அனிதா சென்-ஐ தோற்கடித்து ரோ கண்ணா வெற்றி பெற்றுள்ளார். இதன் காரணமாக இவர் கலிபோர்னி யாவை பிரதிநிதித்துவப்படுத்தும் அமெரிக்க ஹவுஸ் இருக்கைக்கு மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கன்னா முதன்முதலில் 2016 ஆம் ஆண்டில் தற்போதைய பிரதிநிதி பதவியில் இருந்து நீக்கப்பட்ட பின்னர், அமெரிக்க சபைக்கு தற்போது மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கன்னா ஹவுஸ் ஆயுத சேவைகள் குழு, மேற்பார்வை மற்றும் பொறுப்புக் குழுவில் பணியாற்றுகிறார். சான் பிரான்சிஸ்கோவின் தெற்கே சிலிக்கான் பள்ளத்தாக்கின் சில பகுதிகளை உள்ளடக்கிய இந்த 17வது மாவட்டம், கடந்த 1990 முதல் ஜனநாயக கட்சிக்கு சாதகமாக அமைந்து வருகிறது.
சுஹாஸ் சுப்ரமணியம்:
சுஹாஸ் சுப்ரமணியம் வர்ஜீனியா மற்றும் முழு கிழக்கு கடற்கரையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட, முதல் இந்திய அமெரிக்கர் என்ற வரலாற்றைப் படைத்துள்ளார். ஜனநாயகக் கட்சியின் கோட்டையான வர்ஜீனியாவின் 10வது காங்கிரஸ் மாவட்டத்திலிருந்து அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு போட்டியிட்ட சுப்ரமணியம், குடியரசுக் கட்சியின் மைக் க்ளான்சியை வீழ்த்தினார். இவர் தற்போது வர்ஜீனியா மாநில செனட்டராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது வெற்றி குறித்து பேசியுள்ள சுப்ரமணியம், “ வர்ஜீனியாவின் 10வது மாவட்ட மக்கள் என் மீது நம்பிக்கை வைத்ததற்கு நான் பெருமைப்படுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ தனேதர்:
மிச்சிகனின் பதின்மூன்றாவது காங்கிரஸ் மாவட்டத்திலிருந்து அமெரிக்க வாழ் இந்தியரான ஸ்ரீ தனேதர், காங்கிரஸ் உறுப்பினராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் தனது குடியரசுக் கட்சியின் போட்டியாளரான மார்டெல் பிவிங்ஸை 35 சதவீத புள்ளிகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
ராஜா கிருஷ்ணமூர்த்தி
ராஜா கிருஷ்ணமூர்த்தி இல்லினாய்ஸின் ஏழாவது காங்கிரஸ் மாவட்டத்தில் இருந்து, தொடர்ந்து ஐந்தாவது முறையாக வெற்றி பெற்றார்.
டாக்டர் அமி பெரா
தொழில் ரீதியாக மருத்துவரான டாக்டர் அமி பெரா, 2013 முதல் கலிபோர்னியாவின் ஆறாவது காங்கிரஸின் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மூத்த அமெரிக்க வாழ் இந்திய காங்கிரஸ்காரர் ஆவார். அவர் தொடர்ந்து ஏழாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஷா, குடியரசுக் கட்சி வேட்பாளரான டேவிட் ஸ்வீகெட்டை வீழ்த்தி வெற்றி வாகை சூடினார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் எந்த கட்சி எங்கு வெற்றி பெற்றுள்ளது, எங்கு முன்னிலையில் என்ற விவரம்…
1) அலபாமா – டொனால்ட் டிரம்ப் – 9 எலக்டோரல் வாக்குகள்
2) கென்டக்கி – டொனால்ட் டிரம்ப் – 8 எலக்டோரல் வாக்குகள்
3) வடக்கு டகோட்டா – டொனால்ட் டிரம்ப் – 3 எலக்டோரல் வாக்குகள்
4) அலாஸ்கா – டொனால்ட் டிரம்ப் (முன்னிலை) – 3 எலக்டோரல் வாக்குகள்
5) லூசியானா – டொனால்ட் டிரம்ப் – 8 எலக்டோரல் வாக்குகள்
6) ஓஹியோ – டொனால்ட் டிரம்ப் – 17 எலக்டோரல் வாக்குகள்
7) அரிசோனா – டொனால்ட் டிரம்ப் (முன்னிலை) – 11 எலக்டோரல் வாக்குகள்
8) மைனே – கமலா ஹாரிஸ் – 4 எலக்டோரல் வாக்குகள்
9) ஓக்லஹோமா – டொனால்ட் டிரம்ப் – 7 எலக்டோரல் வாக்குகள்
10) ஆர்கன்சாஸ் – டொனால்ட் டிரம்ப் – 6 எலக்டோரல் வாக்குகள்
11) மேரிலேண்ட் – கமலா ஹாரிஸ் – 10 எலக்டோரல் வாக்குகள்
12) ஓரிகான் – கமலா ஹாரிஸ் – 8 எலக்டோரல் வாக்குகள்
13) கலிபோர்னியா – கமலா ஹாரிஸ் – 54 எலக்டோரல் வாக்குகள்
14) மாசசூசெட்ஸ் – கமலா ஹாரிஸ் – 11 எலக்டோரல் வாக்குகள்
15) பென்சில்வேனியா – டொனால்ட் டிரம்ப் – 19 எலக்டோரல் வாக்குகள்
16) கொலராடோ – கமலா ஹாரிஸ் – 10 எலக்டோரல் வாக்குகள்
17) மிச்சிகன் – டொனால்ட் டிரம்ப் (முன்னிலை) – 15 எலக்டோரல் வாக்குகள்
18) ரோட் தீவு – கமலா ஹாரிஸ் 4 – எலக்டோரல் வாக்குகள்
19) கனெக்டிகட் கமலா ஹாரிஸ் – 7 எலக்டோரல் வாக்குகள்
20) மினசோட்டா – கமலா ஹாரிஸ் – 10 எலக்டோரல் வாக்குகள்
21) தெற்கு கரோலினா – டொனால்ட் டிரம்ப் – 9 எலக்டோரல் வாக்குகள்
22) டெலவேர் – கமலா ஹாரிஸ் – 3 எலக்டோரல் வாக்குகள்
23) மிசிசிப்பி – டொனால்ட் டிரம்ப் – 6 எலக்டோரல் வாக்குகள்
24) தெற்கு டகோட்டா – டொனால்ட் டிரம்ப் – 3 எலக்டோரல் வாக்குகள்
25) கொலம்பியா மாவட்டம் – கமலா ஹாரிஸ் – 3 எலக்டோரல் வாக்குகள்
26) மிசூரி – டொனால்ட் டிரம்ப் – 10 எலக்டோரல் வாக்குகள்
27) டென்னசி – டொனால்ட் டிரம்ப் – 11 எலக்டோரல் வாக்குகள்
28) புளோரிடா – டொனால்ட் டிரம்ப் – 30 எலக்டோரல் வாக்குகள்
29) மொன்டானா – டொனால்ட் டிரம்ப் – 4 எலக்டோரல் வாக்குகள்
30) டெக்சாஸ் – டொனால்ட் டிரம்ப் – 40 எலக்டோரல் வாக்குகள்
31) ஜார்ஜியா – டொனால்ட் டிரம்ப் – 16 எலக்டோரல் வாக்குகள்
32) நெப்ராஸ்கா – டொனால்ட் டிரம்ப் – 5 எலக்டோரல் வாக்குகள்
33) உட்டா – டொனால்ட் டிரம்ப் – 6 எலக்டோரல் வாக்குகள்
34) ஹவாய் – கமலா ஹாரிஸ் – 4 எலக்டோரல் வாக்குகள்
35) நெவாடா – டொனால்ட் டிரம்ப் (முன்னணி) – 6 எலக்டோரல் வாக்குகள்
36) வெர்மான்ட் – கமலா ஹாரிஸ் – 3 எலக்டோரல் வாக்குகள்
37) ஐடாஹோ – டொனால்ட் டிரம்ப் – 4 எலக்டோரல் வாக்குகள்
38) நியூ ஹாம்ப்ஷயர் – கமலா ஹாரிஸ் – 4 எலக்டோரல் வாக்குகள்
39) வர்ஜீனியா – கமலா ஹாரிஸ் – 13 எலக்டோரல் வாக்குகள்
40) இல்லினாய்ஸ் – கமலா ஹாரிஸ் – 19 எலக்டோரல் வாக்குகள்
41) நியூ ஜெர்சி – கமலா ஹாரிஸ் – 14 எலக்டோரல் வாக்குகள்
42) வாஷிங்டன் – கமலா ஹாரிஸ் – 12 எலக்டோரல் வாக்குகள்
43) இந்தியானா – டொனால்ட் டிரம்ப் – 11 எலக்டோரல் வாக்குகள்
44) நியூ மெக்சிகோ – கமலா ஹாரிஸ் – 5 எலக்டோரல் வாக்குகள்
45) மேற்கு வர்ஜீனியா – டொனால்ட் டிரம்ப் – 4 எலக்டோரல் வாக்குகள்
46) அயோவா – டொனால்ட் டிரம்ப் – 6 எலக்டோரல் வாக்குகள்
47) நியூயார்க் – கமலா ஹாரிஸ் – 28 எலக்டோரல் வாக்குகள்
48) விஸ்கான்சின் – டொனால்ட் டிரம்ப் – 10 எலக்டோரல் வாக்குகள்
49) கன்சாஸ் – டொனால்ட் டிரம்ப் – 6 எலக்டோரல் வாக்குகள்
50) வடக்கு கரோலினா – டொனால்ட் டிரம்ப் – 16 எலக்டோரல் வாக்குகள்
51) வயோமிங் – டொனால்ட் டிரம்ப் – 3 எலக்டோரல் வாக்குகள்