இந்திய கடற்படைக்கு சொந்தமான விமானம், பயிற்சியின்போது விபத்தில் சிக்கியது. இதில் பயணம் செய்த ஒரு விமானி மீட்கப்பட்ட நிலையில், மற்றொரு விமானியை தேடும்பணி நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து இந்திய கடற்படை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நேற்று மாலை 5 மணியளவில் கடற்படையைச் சேர்ந்த மிக் -29 கே பயிற்சி விமானம் விபத்தை சந்தித்ததாக கூறியுள்ளதுமு. இதையடுத்து, அதில் பயணம் செய்த விமானியை தேடும் பணியை கடற்படை முடுக்கிவிட்டது. இதில், ஒரு விமானி பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். காணாமல் போன மற்றொரு விமானியைத் தேடும் பணியில் கடற்படை தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
கடற்படை விமான விபத்து குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.