மும்பை

ந்திய கிரிக்கெட் அணி இந்த வருட இறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செல்ல உள்ளது.

இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு இந்திய கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் செய்து போட்டிகளில் கலந்துக் கொள்ள உள்ளது.    இதற்கான விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளன.

இந்த சுற்றுப்பயணத்தில் 2018ஆம் ஆண்டு நவம்பர் 21 முதல் 25 வரை டி 20 போட்டிகள் நடைபெற உள்ளன.  அதற்குப் பின் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்கள் நடைபெறும்.  இந்த தொடர்கள் 2018ஆம் ஆண்டு டிசம்பர் 6 முதல் 2019ஆம் ஆண்டு ஜனவர் 7 வரை நடைபெறும்.    வரும் 2019ஆம் ஆண்டு ஜனவரி 12 முதல் 18 வரை 3 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் தொடர் நடைபெறும்.

இந்தியா – ஆஸ்திரேலியா தொடர் அட்டவணை

டி20 தொடர்

முதல் டி20: நவம்பர் 21, பிரிஸ்பேன்
2-வது டி20: நவம்பர் 23, மெல்போர்ன்
3-வது டி20: நவம்பர் 25, சிட்னி

டெஸ்ட் தொடர்

முதல் டெஸ்ட்: டிசம்பர் 6-10, அடிலெய்ட்
2-வது டெஸ்ட்: டிசம்பர் 14-18, பெர்த்
3-வது டெஸ்ட்: டிசம்பர் 26-30, மெல்போர்ன்
4-வது டெஸ்ட்: ஜனவரி 3-7, சிட்னி

ஒருநாள் தொடர்

முதல் ஒருநாள் ஆட்டம்: ஜனவரி 12, சிட்னி
2-வது ஒருநாள் ஆட்டம்: ஜனவரி 15, அடிலெய்ட்
3-வது ஒருநாள் ஆட்டம்: ஜனவரி 18, மெல்போர்ன்

இந்த போட்டிகளில் அடிலெய்டில் நடைபெறும் டெஸ்ட் பகல் இரவு ஆட்டமாக நடைபெற வேண்டும் என ஆஸ்திரேலியா விருப்பம் தெரிவித்துள்ளது.   ஆனால் பிசிசிஐ இதுவரை அதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை.