சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணுவுக்கு ‘தகைசால்தமிழர்’ விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த மாக்சிஸ்டு தலைவர் சங்கரய்யாவுக்கு வழங்கப்பட்டது.
தமிழ்நாட்டிற்கும், தமிழ் இனத்திற்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் விதமாக, `தகைசால் தமிழர்’ என்ற பெயரில் புதிய விருதை உருவாக்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார் . அதன்படி ஓவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று முதலமைச்சர் கைகளால் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.இந்த விருதுடன், பாராட்டுச் சான்றிதழும், பரிசுத்தொகையாக 10லட்ச ரூபாய் காசோலையும் கையளிக்கப்படும் என தமிழ்நாடு அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த விருதுக்கு கடந்த ஆண்டு (2021) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யா தேர்வு செய்யப்பட்டிருந்தார். இந்த நிலையில், இந்த ஆண்டு, இந்திய கம்யூனிஸ்டு தலைவர் நல்லக்கண்ணு தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இவருக்கு தகைசால் விருது, சுதந்திரதின விழாக் கொண்டாட்டத்தின் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் வழங்கப்படுகிறது.