டெல்லி
இந்த ஆண்டு இந்திய வணிகப் பொருட்கள் ஏற்றுமதி கடந்த ஆண்டை விட 2.54% உயர்ந்துள்ளது.

இந்த ஆண்டு ஜூன் மாதம், வணிகப் பொருட்கள் ஏற்றுமதி 3 ஆயிரத்து 520 கோடி டாலராக இருந்தது. அதே வேளையில் கடந்த ஆண்டின் இதே ஜூன் மாதத்தில் வணிக பொருட்கள் ஏற்றுமதி 3 ஆயிரத்து 432 கோடி டாலராக மட்டுமே இருந்தது.
எனவே சென்ற ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த் ஆண்டு வணிகப் பொருட்கள் ஏற்றுமதி 2.56 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த தகவலை மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதற்கு என்ஜினீயரிங் பொருட்கள், மின்னணு பொருட்கள், மருந்து பொருட்கள், காபி, இயற்கை, செயற்கை ரசாயனங்கள் ஆகியவற்றின் ஏற்றுமதி அதிகரித்ததே காரணம் என்றும் மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Patrikai.com official YouTube Channel