இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் இந்தியன் 2 படத்தில் நடித்து வந்தார். இதில் கமலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். லைகா நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது.

படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து, கொரோனா பரவல், இயக்குநர் ஷங்கருக்கும், தயாரிப்பு நிறுவனத்திற்கும் இடையே கருத்து வேறுபாடு ஆகிய பிரச்சினைகளால் ‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு தடைப்பட்டு போனது.

இந்நிலையில் தயாரிப்பு நிறுவனத்திற்கும், ஷங்கருக்கும் நடந்த பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்பட்டுள்ளதால் இந்தியன் 2 படப்பிடிப்பை விரைவில் தொடங்க ஷங்கர் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.