டெல்லி: எகனாமிக்ஸ் டைம்ஸ் நடத்திய GBS 2026 உச்சி மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி,  இந்தியா இனி வெறும் சந்தை அல்ல.. உலகின் வளர்ச்சிக்கான இன்ஜின் என கூறினார்.

ET Now GBS 2026 உச்சி மாநாட்டில் பங்கேற்று பேசிய பிரதமர நரேந்திர மோடி, உலகளாவிய சவால்களை மீறி இந்தியா வேகமான வளர்ச்சியை அடைந்து வருவதாகவும், விரைவில் உலகின் 3வது பெரிய பொருளாதார சக்தியாக மாறும் பாதையில் இருப்பதாகவும் தெரிவித்தார்.

70 ஆண்டுகளுக்கு முன் உருவான உலக ஒழுங்கு தற்போது மாற்றமடைந்து கொண்டிருக்கிறது என்றும், இந்த புதிய சூழலில் இந்தியா உலக வளர்ச்சியின் முக்கிய இயக்க சக்தியாக உருவெடுக்கப் போகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

          ET NOW-இன் உலகளாவிய வணிக உச்சி மாநாடு (GBS) 2026, பிப்ரவரி 13 மற்றும் பிப்ரவரி 14 ஆகிய  இரு நாட்கள் டெல்லியில் உள்ள ஹோட்டல் தாஜ் பேலஸில் நடைபெறுகிறது. A Decade of Disruption. A Century of Change” என்ற கருப்பொருளை கொண்டு நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த முதலமைச்சர்கள், மத்திய, மாநில அமைச்சர்கள், பெருநிறுவனங்களின் சிஇஓக்கள், தொழில்துறையின் முன்னணி நட்சத்திரங்கள், கொள்கை வடிவமைப்பாளர்கள் என பலரும் பங்கேற்கின்றனர்.

இந்த உச்சி மாநாட்டின் முதல் நாளான  நேற்று  (13.02.2025) பிரதமர் நரேந்திர மோடி நிகழ்வில் பங்கேற்றார். அவரை டைம்ஸ் நெட்வொர்க் குழும எம்.டி. வினீத் ஜெயின் வரவேற்றார். தொடர்ந்து பிரதமர் மோடி நிகழ்வில் முதன்மையுரை ஆற்றினார்.

பிரதமர் மோடி தனது உரையில், “நமது அரசு பொறுப்பேற்ற பின் ஒரே விதமான பொருளாதார மாடலை பின்பற்ற கூடாது என்பதை முடிவெடுத்தோம். தேவைக்கு ஏற்ப மாற்றங்களை, சீர்திருத்தங்களை மேற்கொள்ள முடிந்ததால் தான், சவால் மற்றும் குழப்பமான சூழல்களை தாண்டியும் இந்திய பொருளாதாரம் முன்னேறி சென்றது.

2014ம் ஆண்டுக்கு முன்பு வரை வேறு வழியின்றி கட்டாயமான சூழல் ஏற்பட்டால் மட்டுமே, சீர்திருத்தங்கள் நடைபெறும் என்ற நிலைமை இருந்தது. உதாரணமாக, முந்தைய ஆட்சியாளர்கள் மின்சார துறையில் பிரச்சனைகள் ஏற்பட்டு தட்டுப்பாடு நிலவினால் மட்டுமே சீர்திருத்தங்களை மேற்கொண்டனர்.

21ம் நூற்றாண்டின் கடந்த தசாப்தம், பல்வேறு குழப்பங்கள், சவால்களை கொண்டாக உலகிற்கு இருந்தது. கொரோனா போன்ற பெருந்தொற்று, உலகின் பல்வேறு பகுதிகளில் போர் மற்றும் மோதல் போக்கு, உலகின் சமத்தன்மையை ஆட்டம் காணும் விதமாக வணிக சங்கிலியில் இடர்பாடுகள் போன்றவை இருந்தன.

ஆனால், இத்தகைய சவாலான சூழலில் தான் ஒரு நாட்டின் சாமார்த்தியம் வெளிப்படும் என்பார்கள். அதை நிரூபிக்கும் விதமாக இந்தியா இந்த சவால்களை எல்லாம் தாண்டி, இதுவரை இல்லாத வகையில் வளர்ச்சியை கண்டுள்ளது. ஜனநாயகத்தை வலுப்படுத்தும் விதமாக பல சாதனைகளை படைத்துள்ளது.கடந்த தசாப்தத்தின் தொடக்கத்தில் இந்தியா உலகின் 12வது பெரிய பொருளாதார சக்தியாக இருந்தது. இது போன்ற சர்வதேச சாவல்களை சந்தித்தாலும், இந்தியா தற்போது உலகின் 3வது பெரிய பொருளாதார சக்தியாக உருவெடுக்கும் வளர்ச்சியில் முன்னேறி வருகிறது.

இன்று உலக வளர்ச்சியில் இந்தியாவின் பங்களிப்பு 16% க்கும் அதிகமாக உள்ளது. இந்த நூற்றாண்டின் வரும் ஆண்டுகளில், நமது பங்களிப்பானது தொடர்ந்து அதிகரிக்கும். எனவே, இந்தியா இனி உலக நாடுகளுக்கு வெறும் சந்தையாக மட்டும் இருக்கப் போவதில்லை. உலகளாவிய வளர்ச்சியை உந்திச் செல்லும் சக்தியாக இருந்து உலகப் பொருளாதாரத்தின் புதிய இன்ஜினாக உருவெடுக்கும்” என்று தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் பேசிய மத்திய தொழில்துறை அமைச்சர் பியூஸ் கோயல்,  இந்தியாவின் வளர்ந்து வரும் வர்த்தக கட்டமைப்பு மற்றும் சிர்திருத்த நடவடிக்கைகளை குறிப்பிட்டு பேசியதுடன், இந்தியா தனது வலிமையான நிலை காரணமாக உலக நாடுகளுடனான ஒப்பந்தங்களை தனது சொந்த நலனுக்கு ஏற்ப வடிவமைப்பதாக பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

விவசாயிகள் நலனில் சமரசம் இல்லை

அமெரிக்காவுடான இந்தியாவின் தடையற்ற ஒப்பந்தம் மற்றும் அந்நாட்டுடான வர்த்தக புரிதல் ஒரு கட்டமைப்பு ரீதியான மாற்றத்தை காட்டுகிறது. சமீப மாதங்களாக கையெழுத்தான ஒப்பந்தங்கள் இந்தியாவின் நலனை கருத்தில் கொண்டே கையெழுத்தானவை என்றும் எந்தவொரு புள்ளியிலும் எந்தவொரு சமரசமும் மேற்கொள்ளவில்லை என பியூஷ் கோயல் தெரிவித்தார்.

இந்திய – அமெரிக்க ஒப்பந்தத்தில் நம் நாட்டு விவசாயிகளின் நலன் பாதிக்கப்படுவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியான குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகின்றன. இந்த விமர்சனங்களுக்கு பதில் தரும் விதமாக பேசிய அமைச்சர் பியூஷ் கோயல், நாங்கள் அமெரிக்கவுடன் ஒப்பந்தத்தை செய்தபோது, நம் விவசாயிகளின் நலனை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் மிகவும் தெளிவாக இருந்தது. எனவே, நம் விவசாயிகள் அதிக உற்பத்தியைக் கொண்டிருந்த அல்லது நாங்கள் தன்னிறைவு அடைய உதவிய அனைத்து முக்கிய பகுதிகளிலும், நாங்கள் FTA-வில் இருந்து விலக்கு அளித்துள்ளோம்” என்றார்.

ஜவுளித்துறை குறித்து பேசிய அமைச்சர் பியூஷ் கோயல், “இந்தியாவின் ஜவுளித் துறை ஏன் வளர்ச்சியடையவில்லை என்பது குறித்து நீண்ட காலமாக நாம் விவாதித்து வருகிறோம். வியட்நாம், பங்களாதேஷ் போன்ற நாடுகளுடன் கூட நம்மால் போட்டியிட முடியவில்லை என்ற நிலை உள்ளது.

இவ்வாறு பேசினார்.

[youtube-feed feed=1]