சென்னை: இந்தியாவின் முதல் மறுபயன்பாட்டு ஹைப்ரிட் ராக்கெட்டான RHUMI 1, விண்ணில் பாய்ந்தது. ‘மிஷன் ரூமி 2024’ திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட இநித ராக்கெட் இன்று காலை வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
தமிழ்நாட்டைச் சேர்த்த பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டினின் ஸ்டார்ப் நிறுவனமான ஸ்பேஸ் ஸோன் என்ற நிறுவனம், மீண்டும் பயன்படுத்தப்படும் வைகியலான சிறிய ராக்கெட்டை உருவாக்கி உள்ளது. இந்த ரீயுசபிள் ஹைப்ரிட் ராக்கெட் டான RHUMI 1 என்ற ராக்கெட் உருவாக்கியிருக்கிறது. இந்த ராக்கெட் இன்று காலை மூன்று சோதனை செயற்கைக்கோள்களுடன் வானில் ஏவப்பட்டுள்ளது.
இன்று காலை 7 மணியளவில் மாமல்லபுரம் அருகே திருவிடந்தை கடற்கரையில் இருந்து வானில் ஏவப்பட்டது. மேலும், 3.50 மீட்டர் உயரம் கொண்ட இந்த ரீயூசபிள் ராக்கெட், வானில் 80 கி.மீ. உயரத்தில் பறக்கக்கூடிய திறன் கொண்டதாகும். மீண்டும் பயன்படுத்தக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ராக்கெட்டால், ஒரே ராக்கெட்டை பயன்படுத்தி பல முறை செயற்கைக்கோளை ஏவலாம் என கூறப்படுகிறது. இதனால் செலவு மிச்சப்படுத்தலாம் என்பதே இந்த திட்டத்தின் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.