டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும் 30,093 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. 374 பேர் உயிரிழந்துள்ளது. .நேற்று இந்தியாவில் 38,164 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று தொற்று பாதிப்பு 30,093ஆக குறைந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. கொரோனா 3வது அலையை எதிர்கொள்ளும் வகையில் முன்னேற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் ஒரேநாளில் 30,093 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3,11,74,322 ஆக அதிகரித்துள்ளது. ‘
கடந்த 24 மணிநேரத்தில் 374 பேர் கொரோனாவால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் பலியானோர் மொத்த எண்ணிக்கை 4,14,482 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் கடந்த 24 மணிநேரத்தில் , 45,254 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். இதன் மூலம் இதுவரை இந்தியாவில் கொரோனாவிலிருந்து மீண்டோர் எண்ணிக்கை 3,03,53,710 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் மொத்தம் 4,06,130 பேர் கொரோனாவுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுவரை கொரோனா தடுப்பூசி 41,18,46,401 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளதாக ஐசிஎம் ஆர் தெரிவித்துள்ளது