டெல்லி: இந்தியாவில் கடந்த 34 மணி நேரத்தில் மேலும் 24,354 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 24,354- பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 73 ஆயிரத்து 889- ஆக உள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 25,455- பேர் குணம் அடைந்துள்ளனர்.
மத்திய சுகாதாரத்துறை இன்று காலை (8 மணி நிலவரப்படி) வெளியிட்டுள்ள தகவலின்படி, புதிதாக 24,354 பேர் கொரோனாவால் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,37,91,061ஆக உயர்ந்தது.
நேற்று மேலும் 234 பேர் இறந்துள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4,48,573 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.33% ஆக உள்ளது
கடந்த 24 மணி நேரத்தில் தொற்றில் இருந்து ஒரே நாளில் 25,455 பேர் குணமடைந்துள்ளனர். இதன்மூலம் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3,30,68,599ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 97.86% ஆக உயர்ந்துள்ளது.
தற்போது நாடு முழுவதும் 2,73,889 பேர் சிகிச்சை பெற்று வருகினற்ன. சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.81% ஆக குறைந்துள்ளது.
இந்தியாவில் நேற்று ஒரு நாள் மட்டும் 69,33,838 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை 89,74,81,554 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.