டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16,862 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளதுடன், 379 பேர்7 உயிரிழந்துள்ளனர். தொற்றில் இருந்து 19,391 பேர் குணமடைந்துள்ளனர்.
மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாடு முழுவதும் புதிதாக மேலும் 16,862 கொரோனாவால் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,40,37,592 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று ஒரே நாளில் மேலும், 379 பேர் இறந்துள்ளனர். இதன்மூலம் நாடு முழுவதும் கொரோனா தொற்று காரணமாக யிரிழந்தோர் மொத்த உ எண்ணிக்கை 4,51,814 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில், தொற்றில் இருந்து 19,391 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,33,82,100 ஆக உயர்ந்துள்ளது. குணமடைவோர் விகிதம் 98.07 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது நாடு முழுவதும் கொரோனா தொற்று காரணமாக 2,03,678 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.60% ஆக குறைந்துள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 30,26,483 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை 97,14,38,553 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.