சென்னை: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. தற்போதைய நிலையில் 90 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

துவக்க வீரர் ரோகித் ஷர்மாவுடன் ஜோடி சேர்ந்து ஆடிவந்த புஜாரா, 21 ரன்கள் எடுத்திருக்கையில் ஜேக் லீச் பந்தில் அவுட்டானார். அதனையடுத்து, முக்கியமான கட்டத்தில் களமிறங்கிய கேப்டன் விராத் கோலி, மொயின் அலியின் பந்துவீச்சில் பெளல்டு ஆகி, டக்அவுட் ஆனார். இதற்கு முன்னர் ஷப்மன் கில்லும் டக்அவுட் ஆனார்.

தற்போது, ரோகித்துடன் ஜோடி சேர்ந்திருப்பவர் துணைக் கேப்டன் ரஹானே. கடந்த பல போட்டிகளில் சரியாக ஆடாத ரஹானே, இந்தமுறை நன்றாக ஆடியே ஆக வேண்டுமென்ற கட்டாயத்தில் உள்ளார். மிடில் ஆர்டர் பேட்டிங்கை பலப்படுத்தும் பொறுப்பு அவரின் க‍ையில் உள்ளது.

தொடர்ந்து களத்தில் உள்ள ரோகித் ஷர்மா, தற்போது 66 ரன்களை எடுத்துள்ளார்.