புனே: இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், இந்திய அணி 1 விக்கெட் இழந்து 117 ரன்களை எடுத்துள்ளது. தற்போது 25 ஓவர்கள் முடிந்துள்ளன.
ரோகித் ஷர்மா 28 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில், தவானுடன் கேப்டன் கோலி களமிறங்கினார். அவரும் நிதானமாக ஆடிவர, அரைசதத்தை நெருங்கிய ஷிகர் தவான், 1 சிக்ஸர் அடித்து அரைசதம் தொட்டார்.
தற்போது, 72 பந்துகளில் 55 ரன்களை அடித்து ஆடிவருகிறார். விராத் கோலி 36 பந்துகளில் 32 ரன்களை எடுத்து களத்தில் நிற்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு, இவர் சதமடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தற்போதைய நிலையில், இந்திய அணி, 25 ஓவர்களில் 1 விக்கெட் இழந்து 117 ரன்களை அடித்துள்ளது. 25 ஓவர்கள் கடந்துவிட்ட நிலையில், இந்திய அணி, இனிமேல் அடித்து ஆடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இங்கிலாந்து தரப்பில் இதுவரை 6 பந்துவீச்சாளர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.