சான் டியாகோ

மெரிக்க நாட்டில் 1 வயதான பெண் குழந்தையை அதன் சகோதரனான 3 வயதுக் குழந்தை சுட்டுக் கொன்றது அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது.

அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தின் சான் டியாகோ கவுண்டியில் உள்ள பால்புரூக்கில் ஒரு துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது. அங்கு 3 வயது குழந்தை ஒன்று வீட்டில் இருந்த துப்பாக்கியை எடுத்து விளையாடிய போது தவறுதலாக வீட்டிலிருந்த ஒரு வயது சகோதரியின் தலைப் பகுதியில் சுட்டுக் கொன்றுள்ளது.

இச்சம்பவம் குறித்து அமெரிக்கக் காவல்துறை,

”ஒரு குழந்தை காவல் நிலையத்திற்கு போன் செய்து உள்ளது. அந்த அழைப்பிற்கு பதிலளித்து சம்பவ இடத்திற்குச் சென்று பார்த்தபோது, 3 வயதுக் குழந்தை தவறுதலாக 1 வயது சகோதரியின் தலையில் சுட்டுள்ளது தெரியவந்தது.

இந்த துப்பாக்கிச் சூட்டுக் காயத்தால் சுயநினைவின்றி இருந்த குழந்தையை மீட்டு பலோமர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.  ஆயினும் அங்குக் குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர்’

என்று கூறி உள்ளனர்.

காவல்துறையினர் சம்பவம் நடந்த இடத்தில் பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டிருந்த கைத்துப்பாக்கியைக் கண்டெடுத்து உள்ளனர். இந்த சம்பவம் குறித்து குழந்தைகளின் நலன் கருதிப் பெயர் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.  காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.