சென்னை

சென்னை வானிலை மையம் அடுத்த 24 மணி நேரத்தில் மிகவும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளது.

கடந்த சில  நாட்களாகத் தமிழகம் முழுவதும்  பரவலாக மழை பெய்து வருகின்றது.  சென்னை வானிலை ய்வு மையம் தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்திற்கு பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறிப்பாகக் கோவை மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம்,கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் எனவும் தலைநகர் சென்னையில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது..

வருகிற 26 மற்றும் 27 தேதிகளில் இலங்கை கடலோரம் மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று வீசக்கூடும். ஆகவே மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு மீன் பிடிக்க செல்லவேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அண்மையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 35 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக  தெரிய் வந்துள்ளது.

அதாவது திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், காஞ்சிபுரம், சென்னை, கடலூர், அரியலூர், திருச்சி, பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், கரூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, மதுரை, கன்னியாகுமரி ஆகிய 35 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\