10 வயதிற்கு கீழ் இருக்கும் 12 மில்லியன் இந்திய குழந்தைகளுக்குத் திருமணமாகிறது அவர்களில் பெரும்பாலானோர் இந்து மதத்தவர்.
கிட்டத்தட்ட 12 மில்லியன் இந்திய குழந்தைகளுக்கு 10 வயதிற்கு முன்னர் திருமணம் செய்யப்படுகிறது, அவர்களில் 84% பேர் இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் 11% பேர் முஸ்லீம் மதத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் இந்தியாஸ்பென்ட் ஆய்வில் சமீபத்தில் வெளியிடப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவு வெளிப்படுத்துகிறது.
இந்த எண்ணிக்கை ஜம்மு காஷ்மீர் மக்கள் தொகைக்கு சமமானது.
இந்த தரவுப் படி, 2011 இல் 7.84 மில்லியன் (65%) திருமணமான குழந்தைகளில் பலர் பெண் குழந்தைகள், இது பெண்கள் தான் கணிசமாகப் பின்தங்கிய உள்ளனர் என்ற உண்மையை மேலும் வலுவூட்டியுள்ளது; திருமணம் செய்து கொண்ட பத்தில் எட்டு படிப்பறிவில்லாத குழந்தைகள் பெண்களாக இருந்தனர். 10 வயதுக்கு முன் திருமணமான 72% இந்து மதப் பெண்களும் கிராமப்புற பகுதிகளைச் சார்ந்தவர்கள், ஆனால் முஸ்லீம் பெண்களோடு ஒப்பிடுகையில், 58.5% முஸ்லீம் பெண்கள் அதிக அளவு கல்வி அறிவோடு குறிப்பிட்ட வயதுக்குப் பின்னர் திருமணம் செய்து கொள்கின்றனர் என்று இந்தத் தரவு மேலும் வெளியிட்டுள்ளது.
ஜெயின் பெண்கள் சமீபமாகத் திருமணம் புரிந்து கொண்டார்கள் (சராசரியாக 20.8 வயதில்), அவர்களுக்குப் பிறகு கிறிஸ்துவப் பெண்கள் திருமணம், (20.6 வயதில்) அடுத்து சீக்கிய பெண்கள் (19.9 வயதில்) என்று இந்தியாஸ்பென்ட் முன்னர் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்து மற்றும் முஸ்லீம் மதப் பெண்கள் தான் முதல் திருமணத்தை (16.7 வயதில்) மிகக் குறைந்த சராசரி வயதில் செய்து கொள்கின்றனர் என்று நிரந்தர் என்கிற ஒரு தில்லி சார்ந்த நிறுவனம் ஏழு மாநில ஆய்வின் முடிவில் கூறியுள்ளது.
கிராமப்புற பெண்களைவிட நகர்ப்புற பகுதிகளில் இருக்கும் பெண்கள், சராசரியாக இரண்டு ஆண்டுகள் கழித்து திருமணம் செய்து கொள்கிறார்கள் என்று இந்தியாஸ்பென்ட் முன்னதாகத் தெரிவித்துள்ளது.
12 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் கல்வியறிவுடைய பெண்களை விடக் கல்வியறிவு இல்லாத பெண்கள் மத்தியில் பதின்வயது கர்ப்பம் மற்றும் தாய்மை நிகழ்வு ஒன்பது மடங்கு அதிகமாக உள்ளது என்று அறிக்கை குறிப்பிட்டுள்ளது. 10 வயதிற்கு முன் திருமணம் நடக்கும் 80% படிப்பறிவில்லாத குழந்தைகள் பெண்குழந்தைகள் தான்.
10 வயதுக்கு கீழ் திருமணம் நடக்கும் 5.4 மில்லியன் (44%) குழந்தைகள் படிப்பறிவு இல்லாதவர்கள் தான், அதில் 80% பேர் பெண்கள் – இது குறைந்த அளவு கல்வியும் சிறு வயதிலேயே திருமணம் நடப்பதும் தொடர்புடையவை என்று குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு 1000 ஆண்களுக்கும் 1403 பெண்கள் கல்விக்கூடங்கள் சென்றதில்லை என்று இந்தியாஸ்பென்ட் பதிவிட்டுள்ளது.
வளரும் நாடுகளில், தரமான கல்விக்கு குறைந்த அணுகல் உடைய பெண்கள் சீக்கிரமே திருமணம் செய்து கொள்ள அதிகமாக வாய்ப்பு இருக்கிறது, என்று உலக வங்கியின் கல்வி துறை ஆலோசகர் க்வென்டின் வோடன் வாதிட்டார்.
பெண்களுக்குச் சிறந்த மற்றும் பாதுகாப்பான வேலை வாய்ப்புகள் இருந்தால், குழந்தைத் திருமணம் விகிதத்தைக் குறைக்க முடியும், மேலும் அடிப்படை உள்கட்டமைப்பு (தண்ணீர், மின்சாரம்) வாய்ப்புகள் இருந்தால் பள்ளிக்காக வேலைகள் செலவிடும் நேரத்தை விடுவிக்கிறது என வேடன் எழுதினார். 30% பெண்கள் மற்றும் 42% ஆண்களுக்குச் சட்ட வயதிற்கு முன்பே திருமணம் செய்யப்படுகிறது.
குழந்தை திருமணத் தடைச் சட்டம், இந்தியாவில் பெண்கள் 18 வயதிற்கு முன்னும் ஆண்கள் 21 வயதிற்கு முன்னும் திருமணம் செய்ய முடியாது என்று கூறுகிறது.
முஸ்லீம் தனிநபர் சட்டம் படி, ஒரு முஸ்லீம் பெண் பருவமடைந்த பின்னர் அல்லது 15 வயது முடிந்த பின்னர் திருமணம் செய்து கொள்ள முடியும் என்று குஜராத் உயர் நீதிமன்றம் மற்றும் தில்லி உயர் நீதிமன்றம் பல்வேறு தீர்ப்புகளில் குறிப்பிட்டுள்ளது.
2011 ல் கிட்டத்தட்ட 102 மில்லியன் பெண்கள் (30% பெண்கள் தொகையில்) 18 வயதுக்கு முன்பே திருமணம் செய்துகொண்டனர்; 2001 ல் 119 மில்லியன் (44% பெண்கள்)ஆக இருந்தது, அதாவது பத்து வருடங்களில் 14 சதவிகிதப் புள்ளிகள் சரிவடைந்துள்ளது.
ஆண்பிள்ளைகள் மத்தியில், 2011ல் 125 மில்லியன் ஆண்கள் 21 வயதிற்கு முன் திருமணம் செய்துகொண்டனர் (42% ஆண்கள் தொகை); 2001 ல் இந்த எண்ணிக்கை 120 மில்லியனாக (49% ஆண்கள் தொகை) இருந்தது, அதாவது பத்து வருடத்தில் 7% வீழ்ச்சியடைந்துள்ளது.
நன்றி: ஸ்க்ரோல்.இன்