சென்னை: புனிதத்துக்கு பாதிப்பை ஏற்படுத்திய Dude திரைப்படத்தில் இருந்து இளையராஜா பாடல்களை உடனே நீங்குங்கள் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டு உள்ளது.
Dude திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள கருத்த மச்சான் என்ற இளையராஜா பாடல்களை நீக்க சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டு உள்ளது.

இந்த வருடம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆன டியூட் திரைப்படத்தில் இளையராஜா இசையமைத்த ‘நூறு வருசம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும் தான்’ என்கிற பாடலும், ‘கருத்த மச்சான்’ என்கிற பாடலும் பயன்படுத்தப்பட்டு இருந்தனர். படம் ரிலீஸ் ஆகி வெற்றிநடை போட்டு வரும் நிலையில், தற்போது அந்த பாடல்களால் டியூட் படத்துக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது
ஏற்கனவே Dude படம் பல்வேறு சர்ச்சைகளை கொண்டுள்ளது. இந்த படத்தில் தமிழர்களின் கலாச்சாரம், குறிப்பாக இந்துக்களின் கலாச்சாரம் குறித்து கீழ்த்தரமாக தெரிவிக்கப்பட்டு இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. இந்த சர்ச்சைகளுக்கு மத்தியில், பிரபல இசையமைப்பாளர் இளையராஜா, தனது இசையில் உருவான பழைய பாடலான ‘கருத்த மச்சான்’ பாடலைப் புதிய படமான ‘டியூட்’ திரைப்படத்தில், அனுமதி இல்லாமல் அல்லது உரிய உரிமை பெறாமல் பயன்படுத்தியதைக் கண்டித்துச் சென்னை உயர் நீதிமன்றத்தில் (ஐகோர்ட்) வழக்குத் தொடுத்துள்ளார். இந்த ‘டியூட்’ படத்திலிருந்து ‘கருத்த மச்சான்’ பாடலை நீக்கக்கோரி அவர் இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளார். இசையமைப்பாளரின் காப்புரிமை (Copyright) மீறப்பட்டுள்ளதாகவும், தனக்கு உரிய நஷ்டஈடு வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் அந்தக் வழக்கில் கோரியுள்ளார். இளையராஜா தொடர்ந்துத் தனது பாடல்களின் காப்புரிமைக்காகப் போராடி வருகிறார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், Dude திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள கருத்த மச்சான் என்ற இளையராஜா பாடல்களை நீக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. பாடலை நீக்க ஏழு நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் கோரிக்கை நிராகரித்தது.
இளையராஜாவின் பாடல்களின் புனிதத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் படத்தில் பாடல் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். இளையராஜாவின் மனுவுக்கு பதில் அளிக்க தயாரிப்பு நிறுவனத்திற்கு ஐகோர்ட் உத்தரவு அளித்துள்ளது.
[youtube-feed feed=1]