வாஷிங்டன்: உலகை ஆட்டுவித்துவரும் கொரோனா வைரஸ் தொற்றால், உலகப் பொருளாதாரம் தெளிவான மந்த நிலைக்கு சென்றுவிட்டதாக அறிவித்துள்ளது பன்னாட்டு நிதியம்.

இதுதொடர்பாக பன்னாட்டு நிதியம் சார்பில் கூறப்பட்டுள்ளதாவது; நாம் இப்­போது 2009ம் ஆண்டு காலகட்டத்தைப்போல் அல்­லது அதை­விட மோச­மான மந்த நிலைக்­குள் சென்­றுள்ளோம். இருப்­பி­னும், அடுத்த ஆண்­டில் பாதிப்­பி­லி­ருந்து மீள­ வாய்ப்புள்ளது. ஆனால், சர்­வ­தேச அள­வில் எல்லா இடங்­க­ளி­லும் வைரஸைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தில் வெற்றி பெற்­றால் மட்­டுமே இது சாத்­தி­ய­மா­கும்.

உல­கின் பிற முன்­னே­றிய பொரு­ளா­தா­ரங்­க­ளைப் போலவே, அமெ­ரிக்­கா­வும் மந்த நிலை­யில் உள்­ளது. மேலும், வளர்ந்த மற்­றும் வளர்ந்துவரும் பொரு­ளா­தா­ரங்­க­ளி­லும் ஒரு பெரிய தடை ஏற்­பட்­டுள்­ளது. உலகப் பொரு­ளா­தா­ரத்­தின் மீதான இந்த திடீர் தாக்­கத்­தால் நிறு­வ­னங்­கள் திவா­லா­வதும், பணி நீக்கத்­தில் இறங்­கு­வ­தும் மிக­வும் அபா­ய­மா­ன­தா­கும். இதன் தாக்­கம், மீட்­சி­யைப் பாதிக்­கும். சமூ­கங்­களின் பிணைப்­பை­யும் பாதித்­து­வி­டும்.

சமீப நாட்­களில், பல்­வேறு நாடு­கள், நிதி சார்ந்த விஷ­யங்­களில், அவர்­க­ளால் என்ன முடி­யுமோ, அந்த நட­வ­டிக்­கை­களை எடுத்­து­ வ­ரு­வ­தாக எங்­கள் உறுப்­பி­னர்­கள் மூலம் அறி­கி­றோம். கிட்­டத்­தட்ட 80க்கும் மேற்­பட்ட குறை­வான வரு­மா­னம் கொண்ட நாடு­கள், அவ­ச­ர­கால நிதி­யு­தவி கேட்டு எங்­க­ளுக்கு கோரிக்கை வைத்­துள்ளன. அவர்­க­ளு­டைய இருப்­பும் உள்­நாட்டு வள­மும் போது­மா­ன­தாக இல்லை என்ற நிலை உள்ளது.

பொரு­ளா­தா­ரத்தை மீட்­டெ­டுக்கத் தேவை­யான நட­வ­டிக்­கை­களை நாங்­கள் முன்வைப்­போம். இந்த விஷ­யத்­தில், நாங்­கள் மிக­வும் ஆத­ர­வாக இருப்­போம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.