டெல்லி: இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்றால், மதத்தின் அடிப்படையில் எப்படி சட்டங்கள் முடியும்? என கேள்வி எழுப்பிய உள்துறை அமித்ஷா, நாட்டில் பொது சிவில் சட்டம் கொண்டு வருவதற்கான நேரம் வந்து விட்டது என்றும், சிஏஏ அடிப்படையில் இந்த மாதம் முதல் குடியுரிமை வழங்கப்படும் என்றவர், நாடாளுமன்றத்தில் பாஜகவிற்கு என ஒரு எம்பி இருக்கும் வரை, சிஏஏவை ரத்து செய்ய முடியாது என கூறினார்.
நாடாளுமன்ற தேர்தலையொட்டி, நாடு முழுவதும் அனல்பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது. ஆட்சியை கைப்பற்ற இண்டியா கூட்டணி முயற்சித்து வரும் நிலையில், ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள என்டிஏ கூட்டணி செயலாற்றி வருகிறது.
இந்த நிலையில், தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, நாட்டில் அமல்படுதப்பட்டுள்ள குடியுரி சட்டமான சிஏஏ அடிப்படையில் இந்த மாதம் முதல் குடியுரிமை வழங்கப்படும் என்றவர், நாடாளுமன்றத்தில் பாஜகவிற்கு என ஒரு எம்பி இருக்கும் வரை, ஆர்டிகள் 370 திரும்ப கொண்டு வரப்படாது என்றும், பொதுசிவில் சட்டம் கொண்டு வருவதற்கான நேரம் வந்துவிட்டதாகவும் கூறினார்.
பாஜக அரசுமீது எதிர்க்கட்சிகள் பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறி வரும் நிலையில், அதற்கு பதில் அளித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்த முறையும் ”எதிர்க்கட்சியினர் ஆட்சிக்கு வர மாட்டார்கள் என்றவர், அவர்களால் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஒருபோதும் ரத்து செய்ய முடியாது. அதுபோல காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்தையும் திரும்ப பெற முடியாது. இது அவர்களுக்கும் தெரியும்.
நாடாளுமன்றத்தில் பாரதிய ஜனதா கட்சிக்கு என கடைசியாக ஒரு எம்.பி., இருக்கும் வரையில், சட்டப்பிரிவு 370-ஐ திரும்ப கொண்டுவர முடியாது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஒழிக்க முடியாது. இப்போது பிரிவு 370 வரலாறாகிவிட்டது, குடியுரிமை திருத்தச் சட்டம் ஒரு யதார்த்தமாகிவிட்டது. CAA திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் வரத் தொடங்கியுள்ளன. விதிகளின்படி ஆய்வு நடக்கிறது. மேலும் தேர்தலுக்கு முன், கடைசி கட்ட வாக்குப்பதிவிற்கு முன், குடியுரிமை வழங்கும் செயல்முறை தொடங்கும் என்று நான் நினைக்கிறேன் என்றவர், கோவிட் காரணமாக குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்துவது தாமதமானது. CAA ஐ முதலில் அமல்படுத்த வேண்டும் என்று தங்களது கட்சி நம்புவதாகவும்” அமித் ஷா பேசியுள்ளார்.
மேற்குவங்கத்தில் நடைபெறும் வன்முறை மற்றும் ஊழல் தொடர்பான கேள்விக்கு பதில் கூறியவர், ”குடியுரிமை என்பது மத்திய அரசை சார்ந்தது. அது மேற்கு வங்க அரசுக்கு தெரியாது. அதற்கும் மாநில அரசுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஒருவேளை அவர்களுக்குத் தெரிந்திருக்கலாம், ஆனால் சிறுபான்மையினரை தவறாக வழிநடத்த அவர்கள் இதைச் சொல்கிறார்கள். மேற்கு வங்கத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுபோய் விட்டது, ஊழல் தலைவிரித்தாடுகிறது, அதை தடுக்க வேண்டிய மம்தா, ஊடுருவல்காரர்களை தனக்கு சாதகமாக்கி வாக்கு வங்கியாகப் பார்க்கிறார் என்று குற்றம் சாட்டினார்.
பொதுசிவில் சட்டம் எப்போது அமலுக்கு வரும் என்ற கேள்விக்கு, பொது சிவில் சட்டம் என்பது அரசியலமைப்பின் ஆணை என்றும், அதை செயல்படுத்த சரியான நேரம் வந்துவிட்டது என்றவர், தற்போது “சரியான நேரம் வந்துவிட்டது என்று நினைக்கிறேன். இதை நாங்கள் இன்று சொல்லவில்லை. எங்கள் கட்சி உருவாவதற்கு முன்பு நாட்டில் மதச் சட்டங்கள் இருக்கக் கூடாது, ஒரே மாதிரியான சிவில் சட்டம் இருக்க வேண்டும் என்று தேர்தல் அறிக்கையில் இருந்தது. இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்றால், மதத்தின் அடிப்படையில் எப்படி சட்டங்கள் முடியும்? இருக்கக் கூடாது” என்று அமித் ஷா பேசியுள்ளார்.