13வது ஒருநாள் சர்வதேச உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் இந்த ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ளது.

அக்டோபர் 5ம் தேதி துவங்கும் இந்த 50 ஓவர் போட்டிகள் நவம்பர் 19 ம் தேதி நிறைவடைகிறது.

இந்த ஆண்டு நடைபெறும் போட்டிகள் முழுக்க முழுக்க இந்தியாவிலேயே நடைபெறும். இதற்கு முன் இந்தியாவில் மூன்று முறை உலகக்கோப்பை போட்டிகள் நடைபெற்ற போதும் அவை மற்றநாடுகளுடன் இணைந்து நடத்தப்பட்டது.

1987ம் ஆண்டு இந்தியா – பாகிஸ்தான், 1996ம் ஆண்டு இந்தியா – பாகிஸ்தான் – இலங்கை மற்றும் 2011ம் ஆண்டு இந்தியா – இலங்கை – பங்களாதேஷ் ஆகிய நாடுகளுடன் இணைந்து நடத்தப்பட்டது.

இந்த முறை இந்தியாவில் மொத்தம் 14 இடங்களில் உள்ள கிரிக்கெட் ஸ்டேடியத்தில் போட்டிகளை நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

வ. எண். ஸ்டேடியம்  நகரம்
1 வான்கடே மும்பை
2 ஈடன் கார்டன்ஸ் கொல்கத்தா
3 பெரோஸ் ஷா கோட்லா டெல்லி
4 எம் சின்னசாமி பெங்களூர்
5 எம்.ஏ.சிதம்பரம் சென்னை
6 சர்தார் படேல் ஸ்டேடியம் அகமதாபாத்
7 ராஜீவ் காந்தி சர்வதேச அரங்கம் ஹைதராபாத்
8 VCA ஸ்டேடியம் நாக்பூர்
9 பிசிஏ மைதானம் மொஹாலி
10 SCA ஸ்டேடியம் ராஜ்கோட்
11 காந்தி ஸ்டேடியம் கவுகாத்தி (அஸ்ஸாம்)
12 ஹோல்கர் ஸ்டேடியம் இந்தூர்
13 கிரீன் பீல்ட் சர்வதேச மைதானம் திருவனந்தபுரம்
14 தர்மசாலா கிரிக்கெட் ஸ்டேடியம் தர்மசாலா (ஹிமாச்சல்)

இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போட்டி அகமதாபாத்-தில் நடைபெறும் என்று கூறப்படுகிறது.

பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு வருவது குறித்து விமர்சனங்களும் மாற்றுக் கருத்துகளும் எழுந்த நிலையில், தற்போது பாகிஸ்தான் இந்தியாவில் விளையாட இருப்பது உறுதியாகியுள்ளது.

கடந்த மாதம் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் போது இந்திய அணி வீரர் முகம்மது ஷமி-யை நோக்கி ‘ஜெய் ஸ்ரீ ராம்’ கோஷம் எழுந்த நிலையில் தற்போது இந்தியா – பாகிஸ்தான் போட்டி அகமதாபாத் நகரில் நடைபெறும் என்ற அறிவிப்பு குஜராத் கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.