துபாய்: ஐசிசி வெளியிட்டுள்ள உலக டெஸ்ட் பேட்ஸ்மென்களுக்கான தரவரிசைப் பட்டியலில், இந்திய வீரர் விராத் கோலி பின்னடைவை சந்திக்க, ரிஷப் பன்ட் முன்னேற்றம் அடைந்துள்ளார்.
புஜாராவும் ரஹானேவும் முதல் 10 இடங்களுக்குள் உள்ளனர்.
இந்தப் பட்டியலில், நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் 919 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறார். ஸ்டீவ் ஸ்மித் 891 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் இருக்கிறார். லபுஷேன் 878 புள்ளிகளுடன் மூன்றாமிடத்திலும், விராத் கோலி 862 புள்ளிகளுடன் நான்காமிடத்திலும் உள்ளனர்.
ரிஷப் பன்ட் 13வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். ரோகித் ஷர்மா 18வது இடத்தில் இருக்கிறார். அதேசமயத்தில், இந்திய அணியின் சுவர் புஜாரா 7வது இடத்திலும், ரஹானே 9வது இடத்திலும் உள்ளனர்.