பெங்களூரு:

2019ல் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணியில் தனிப்பெரும் கட்சியாக காங்கிரஸ் வெற்றால் நான் பிரதமராக பதவி ஏற்பேன் என்று ராகுல் காந்தி கூறினார்.

கர்நாடகா தேர்தலுக்கு பிரச்சாரம் மேற்கொண்டு வரும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தில பெங்களூருவில் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘ ஊழல் குற்றச்சாட்டுள்ளவரை கர்நாடக முதலமைச்சர் வேட்பாளராக பிரதமர் தேர்வு செய்தது ஏன்? 2019 நாடாளுமன்ற தேர்தல் கூட்டணியில் தனிப்பெரும் கட்சியாக காங்கிரஸ் வெற்றி பெற்றால் பிரதமராக பதவி ஏற்பேன்.

அமித்ஷா மீது கொலை குற்றச்சாட்டு உள்ளது. அமித்ஷா மீது நம்பகத்தன்மை இருப்பதாக நினைக்கவேண்டாம். பாஜக தலைவர் கொலை குற்றச்சாட்டுடன் உள்ளதை மக்கள் மறந்து விட்டனர். நேர்மையை பற்றி பேசும் கட்சியின் தலைவராக கொலைக் குற்றச்சாட்டு உள்ளவர் இருக்கிறார்’’ என்றார்.