சென்னை: தமிழ்நாட்டு சட்டமன்ற தேர்தலையொட்டி, அரசியல் கட்சிகளின் கூட்டணி தொகுதிப்பங்கீடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தேமுதிக தனது நிலைப்பாட்டை அறிவிப்பதில் தாமதம் செய்து வருகிறது. இது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், இன்று தேமுதிகவில் விருப்ப மனு விநியோகத்தை தொடங்கிவைத்த பிரேமலதா விஜயகாந்த், தேர்தல் ஆணையம் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிடுவதற்கு முன்பு கூட்டணி குறித்து அறிவிப்போம் என்று கூறி உள்ளார்.

பிரேமலைதா ஏற்கனவே 2028ம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற தேமுதிக மாநாட்டில் கூட்டணி குறித்து அறிவிப்பதாக கூறினார். ஆனால், அன்றைய தினம் எந்தவொரு அறிவிப்பும் வெளியிடாமல் ஜனவரியில் அறிவிப்பதாக கூறினார். பின்னர், தேர்தல் அறிவிப்பு வெளியான பிறகு அறிவிப்போம் என்றார். தற்போது தேர்தல் வாக்காளர் பட்டியல் வெளியான பிறகு அறிவிப்பதாக கூறி உள்ளார்.

அரசியல் கட்சியை நடத்தி வரும் பிரேமலதா, கூட்டணி குறித்து சரியான முடிவை எடுக்க முடியாத நிலையில்,  தொடர்ந்து பிரேமலதா மக்களையும், அரசியல் கட்சிகளையும், ஏமாற்றி வருவது சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு பிறகு, கட்சியை பணத்துக்காக மட்டுமே நடத்தி வரும் பிரேமலதா, ஒவ்வொரு தேர்தலின்போதும்,  ஒவ்வொரு கட்சிகளுடன் கூட்டணி வைத்து, தங்களுக்கு இத்தனை சதவிகிதம் வாக்கு வங்கி இருப்பதாக கூறி, அரசியல் பேரம் நடத்தியும்,  எம்.பி. சீட் கேட்டும்,   கோடி கணக்கில், பணத்தை வாங்கி அரசியல் செய்து வருகிறார். இதனால், அவர்மீதான நம்பிக்கை தகர்ந்துவிட்டது.

இந்த  நிலையில், வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில், எந்த கட்சியுடன் கூட்டணி என்பதில், அவரது பேரம் இழுபறியாக இருந்து வருவதால், அவரால் கூட்டணியை அறிவிக்க முடியாத நிலை உள்ளது. அதனால்,  வரும் 17ஆம் தேதிக்குள் கூட்டணி முடிவை அறிவிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

அதாவது தேர்தல் ஆணையம் “இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாவதற்கு முன் எங்கள் கூட்டணியை இறுதி செய்வோம்” என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இவரது கட்சிஒற்றை இலங்க எண்ணில் மட்டுமே தேர்தலில் பங்குபெற உள்ள நிலையில்,  தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து தொகுதிகளிலும்,   தேமுதிக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனு விநியோகத்தை தொடங்கி வைத்து கல்லாகட்டி வருகிறார்.

அதாவது,  தமிழ்நாட்டில் பொதுத் தொகுதிகளுக்கான விருப்ப மனுவிற்கு கட்டணமாக 15 ஆயிரம் ரூபாயும், தனித் தொகுதிகளுக்கான விருப்ப மனுவிற்கு கட்டணமாக 10 ஆயிரம் ரூபாயும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை வரும் 12-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் ஒப்படைக்க வேண்டும் என்று தேமுதிக சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது

. இந்த நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த பிரேமலதா, கூட்டணி நிலைப்பாடு குறித்த கேள்விக்கு பதில் அளித்தார். பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்ததாவது: “இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாவதற்கு முன் எங்கள் கூட்டணியை இறுதி செய்வோம்” இவ்வாறு தெரிவித்தார். இறுதி வாக்காளர் பட்டியல் வரும் 17ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

[youtube-feed feed=1]