பாட்னா:

பீகார் மாநிலத்தில் பள்ளிகளில் மதிய உணவு சமைக்கும் பெண்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.37 மட்டுமே தரப்படுகிறது.


கடந்த பிப்ரவரி 11-ம் தேதி அக்சய பாத்திர மதிய உணவு திட்டத்தை உத்திரப்பிரதேசத்தில் பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்.

புதிய இந்தியாவுக்கு வலிமையான குழந்தைகள் வேண்டும் என்பதால், மதிய உணவு திட்டம் தொடங்கப்பட்டதாக பிரதமர் கூறினார். ஆனால் அவர்களுக்கு யார் சமைப்பது என்பதை அவர் கூறவில்லை.

மோடி இந்த நிகழ்ச்சியில் பேசிக் கொண்டிருந்தபோது, பீகார் சட்டப்பேரவையை பள்ளிகளில் மதிய உணவு சமைக்கும் பெண்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்திக் கொண்டிருந்தனர்.

பீகாரில் 2.5 லட்சம் மதிய உணவு சமைக்கும் பெண்கள் இருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலோர் தலித் மற்றும் பழங்குடியினத்தவர்.

இவர்களுக்கு நாள் ஒன்றுக்கு வெறும் ரூ.37 மட்டுமே சம்பளமாக தருகிறது அரசு. அவர்களை 8 மணிநேரம் வேலை வாங்கும் அரசுக்கு, சம்பளத்தை மட்டும் கொடுக்க மனதில்லை.

தொடர்ந்து 35 நாட்களாக போராடிக் கொண்டிருக்கும் இந்த பெண்களின் குரல் இன்னும் ஆட்சியாளர்களுக்கு எட்டவில்லை.