இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள் வரை பாகுபாடு இல்லாமல் அனைவரையும் தாக்குகிறது .

கடந்த 5-ம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு செயற்கை சுவாசம், எக்மோ போன்ற உயிர்காக்கும் மருத்துவத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இன்று (ஆகஸ்ட் 21) மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்

தொடர்ந்து வென்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவிகள் பொருத்தப்பட்டு சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை தற்போது ஸ்திரமாக உள்ளது.

அவரது உடல்நிலையை எங்கள் மருத்துவ நிபுணர்கள் குழு தொடர்ந்து தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. அவர் உடல்நிலை குறித்து அவரது குடும்பத்தினருக்கும் அவ்வப்போது தெரிவிக்கப்பட்டு வருகிறது என வெளியிட்டுள்ளனர் .