பெருசாராய், பீகார்
மத்திய அமைச்சர் அமித்ஷா பயணம் செய்த ஹெலிகாப்டர் சிறிது நேரம் கட்டுப்பாட்டை இழந்துள்ளது.
நாடெங்கும் நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மத்திய அமைச்சர் அமித்ஷா நாட்டின் பல்வேறு பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
அவ்வகையில் பீகார் மாநிலம் பெகுசாராய் என்ற பகுதியில் தேர்தல் பிரசாரத்தை முடித்துவிட்டு அமித்ஷா ஹெலிகாப்டர் பயணம் மேற்கொண்டார். ஹெலிகாப்டர் புறப்பட்டபோது மேலே செல்ல முடியாமல் அந்தரத்தில் கட்டுப்பாட்டை இழந்து தடுமாறியது.
எனினு சிறிது நேரத்தில் ஹெலிகாப்டர் சீராக வானில் பறந்தது. இவ்வாறு சிறிது நேரம் கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர், பின்னர் சீராக இயங்கியதால், அதிர்ஷ்டவசமாக அமித்ஷா உயிர் தப்பினார்.
ஹெலிகாப்டர் தொழில்நுட்பக்கோளாறு காரணமாகச் சிறிதுநேரம் கட்டுப்பாட்டை இழந்ததா அல்லது காற்று காரணமாக கட்டுப்பாட்டை இழந்ததா என விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.