வாஷிங்டன் :

லகையே அச்சுறுத்திய ஜெர்மன் சர்வாதிகாரி அடால்ப் ஹிட்லர் இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்திய தொலைபேசி ரூ. 1.62 கோடிக்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது.

இந்த போனை, ஹிட்லர் தனது தனிப்பட்ட உபயோகத்திற்காக பயன்படுத்தி வந்தார். கடைசி இரண்டு வருடங்களில்  பல முக்கிய உத்தரவுகளை இந்த போன் மூலம்தான் ஹிட்லர் பிறப்பித்தார்.

ஆரம்பத்தில் கறுப்பு நிறத்தில் இருந்த இந்த தொலைபேசிக்கு, பின்னர் சிவப்பு நிற வண்ணம் பூசப்பட்டது. இதில் ஹிட்லரின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. மேலும், ஸ்வஸ்திக் மற்றும் கழுகு சின்னங்களும் பதிக்கப்பட்டுள்ளது.

ஹிட்லரின் மரணத்திற்கு பிறகு, 1945ம் ஆண்டு பதுங்கு குழி ஒன்றில் இருந்து இந்த போன் கண்டுபிடிக்கப்பட்டது.

தற்போது இந்த போன்,  243,000 அமெரிக்க டாலருக்கு (ரூ.1,62,72,495) ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த தொலைபேசி மட்டுமின்றி, ஹிட்லர் பயன்படுத்திய 1000 பொருட்கள் ஏலம் விடப்பட்டுள்ளன.