சென்னை: யாருடைய சுயலாபத்திற்காகவும் வரலாற்றை திரித்து கூறக் கூடாது என அய்யா வைகுண்டர் தலைமைபதி நிர்வாகி பால பிரஜாபதி அடிகளார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஆளுநரின் பேச்சை கண்டித்த பாலபிரஜாபதி அடிகளார், அய்யா வைகுண்டர் மனுதர்மத்துக்கு எதிரானவர், வரலாற்றை திரித்துக் கூறக்கூடாது என்று கூறினார்.

முன்னதாக, மார்ச் 4ந்தேதி கிண்டி ஆளுநர் மாளிகையில்    அய்யா வைகுண்ட சுவாமியின் 192-வது அவதார தின விழா மற்றும் மகா விஷ்ணுவின் அவதாரம் வைகுண்டசுவாமி அருளிய சனாதன வரலாறு என்ற புத்தக வெளியீட்டு விழா  நடைபெற்றது.  இதில், மணலி அய்யா வைகுண்ட தர்மபதி துரைப்பழம், அய்யா வழி சேவை அமைப்பு செயலர் அருளானந்தம் உட்பட பலர் பங்கேற்றனர். இந்த விழாவில்,  ஆளுநர் ஆர்.என்.ரவி, பங்கேற்று நுாலை வெளியிட்டு சிறப்புரை ஆற்றினார்.

அப்போது,  அய்யா வைகுண்ட நாராயணரின் அவதாரம் தோன்றிய சமூக கலாச்சார காலக்கட்டத்தை எண்ணிப் பார்க்க வேண்டும். சனாதன தர்மத்துக்கு ஊறு ஏற்படும்போது கடவுள் நாரயணன் அவதாரம் எடுக்கிறார். அப்படியான அவதாரமாக வைகுண்டர் 192 ஆண்டுகளுக்கு முன் தோன்றினார். சனாதன கோட்பாட்டின் அடிப்படையில் பாரதத்தில் மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ்ந்தார்கள்.

அந்த ஒற்றுமை கிழக்கிந்திய கம்பெனிக்கு சவாலாக இருந்தது.   திராவிட மொழிகள் குறித்து கால்டுவெல் எழுதிய நூல் போலியானது. ஜி.யு.போப், கால்டுவெல் போன்றவர்கள் பள்ளிப்படிப்பை கூட முடிக்காதவர்கள். மக்களை கிறித்துவ மதத்திற்கு மாற்றவே அவர்கள் இந்தியா வந்தனர். எனக்கு இயேசுவும் பிடிக்கும், பைபிளும் பிடிக்கும். ராமேஸ்வரம், காசி ஆகியவை ஒட்டு மொத்த நாட்டிற்கும் பொதுவானவை. ஆங்கிலேயர்கள் தங்களது ஆட்சிக் காலத்தில் சனாதன தர்மத்தை ஒழிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

ராமேசுவரம், காசி ஆகியவை நாட்டுக்கு பொதுவானவை. கிறிஸ்தவம் ஐரோப்பாவுக்கு செல்லும்முன் இந்தியாவுக்கு வந்தது. வெளியில் இருந்து வந்த சிலர், நம் நாட்டின் சனாதன தர்மத்தின் படி அனைவரும் சமம் என்ற கோட்பாட்டை அழிக்க முயன்றனர். சனாதன தர்மத்துக்கு பாதிப்பு ஏற்படும் போதெல்லாம் ராமர், கிருஷ்ணர், வள்ளலார், அய்யா வைகுண்ட நாராயணன் போன்றோர் அவதாரங்களை எடுத்துள்ளனர்.1757-ல் பெங்கால் மகாணத்தைக் கைப்பற்றிய கிழக்கிந்திய கம்பெனி, தொடக்கத்தில் வணிகத்தில் மட்டுமே ஈடுபட்டது. மொழி, கலாச்சாரம் மற்றும்பண்பாடுகளில் வேறுபட்டு இருந்தாலும், இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட நாடாக திகழ்ந்தது.

குறிப்பாக, மக்கள் சனாதன கோட்பாட்டின் அடிப்படையில் ஒற்றுமையுடன் வாழ்ந்தனர். இந்தஒற்றுமை கிழக்கிந்திய கம்பெனிக்கு, இந்தியாவை அடிமைப்படுத்த பெரும் சவாலாக இருந்தது. அதற்காக, சனாதன தர்மத்தை அழிக்க பிரிட்டிஷ் அரசு தீர்மானித்தது. அமெரிக்கா, கனடா போன்றபல்வேறு நாடுகளை அடிமையாக்கியதை போல், சனாதன தர்மத்தை அழிப்பதன்மூலம், இந்தியாவை அடிமையாக்கவும் பிரிடிஷ் அரசு முடிவெடுத்தது. இந்தியாவை ஆள்வதற்கு, அதற்கு கிறிஸ்தவ மதமாற்றத்தை பிரிட்டிஷ் அரசு கொள்கையாக கொண்டது.

கடந்த 1813- ம் ஆண்டு பள்ளிபடிப்பை முடிக்காத பிரிட்டிஷ்காரர்களான கால்டுவெல், ஜி.யு. போப் ஆகியோர் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். திராவிட மொழிகள் குறித்து கால்டுவெல் எழுதிய நூல் போலியானது. மெட்ராஸ் மகாணத்தில் மக்களை கிறிஸ்தவ மதமாற்றத்துக்கு உட்படுத்தினர். ஆங்கிலேயர்கள் தங்களது ஆட்சிக் காலத்தில் சனாதன தர்மத்தை ஒழிக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்தியாவில் சனாதானத்தை அழிக்கவும், கிறிஸ்தவமதத்தை பரப்பவும் 1830-ல்பிரிட்டிஷ் அரசு புதிய சட்டத்தைக் கொண்டு வந்தது. அனைத்து மக்களுக்கான சேவையை மத்திய அரசு வழங்கி வருகிறது. வரும் 2047-ம் ஆண்டில் வளர்ந்த நாடாக இந்தியா மாறும் என தெரிவித்திருந்தார்.

ஆளுநரின் கருத்து பேசும்பொருளான நிலையில்,  அய்யா வைகுண்டர் தலைமைபதி நிர்வாகி பால பிரஜாபதி அடிகளார் ஆளுநரின் செயலை கடுமையாக சாடியுள்ளார்.

இன்று  செய்தியாளர்களை சந்தித்த  பால பிரஜாபதி அடிகளார் , அய்யா வைகுண்டர் மனுதர்மத்துக்கு எதிராக குரல் கொடுத்தவர். வரலாறு தெரியாதவர்கள், வாய் திறக்கக்கூடாது, எல்லாவற்றாயும் தனதாக்கி பட்டா போடும் செயலை ஆளுநர் செய்யக்கூடாது. யாருடைய சுயலாபத்திற்காகவும் வரலாற்றை திரித்து கூறக் கூடாது. அவரவர் வேலையை அவரவர் பார்க்க வேண்டும்.

இவ்வாறு  தெரிவித்துள்ளார்.