சிம்லா: இமாச்சல பிரதேச முதலமைச்சர் ஜெய்ராம் தாகூர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளார்.
நாடு முழுவதும் வேகம் எடுத்துள்ள கொரோனா, பொதுமக்களை மட்டுமின்றி மத்திய அமைச்சர்கள், முதல்வர்கள், அமைச்சர்கள் உள்ளிட்டோரையும் பாதித்து வருகிறது.
இந் நிலையில், இமாச்சலபிரதேச முதலமைச்சர் ஜெய்ராம் தாகூர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதை அவர் தமது டுவிட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தி உள்ளார்.
அவர் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: கொரோனா பரிசோதனை செய்து கொண்டேன். அப்போது, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
மருத்துவர்கள் ஆலோசனைப்படி வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு இருக்கிறேன். எனவே, என்னை தொடர்பு கொண்டவர்கள், கொரோனா தொற்று இருக்கிறதா என்று பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என தெரிவித்துள்ளார்.