நீதிபதி சுதிர் அகர்வால்

அலகாபாத்:

ந்திர ஐகோர்ட்டில் பணியாற்றி வரும் நீதிபதி ஒருவர் 12 ஆண்டுகளில் 1 லட்சம் வழக்குகளை விசாரித்து சாதனை படைத்துள்ளார்.

ஆந்திர மாநிலம் அலகாபாத்தில் உள்ள உயர்நீதி மன்றத்தில் பணியாற்றி வருபவர் சுதிர் அகர்வால். மூத்த நீதிபதியான இவர் கடந்த 12 ஆண்டுகளில் 1லட்சம் வழக்குகளை விசாரணை செய்துள்ளார். இது ஐதராபாத் வரலாற்றில் சாதனை என்று கூறப்படுகிறது.

நீதிபதி சுதிர் அகர்வால் கடந்த 2005ம் ஆண்டு  அலகாபாத் உயர்நீதி மன்றத்தில் கூடுதல் நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டார். பின்னர் 2007ம் ஆண்டு முதல் நிரந்தர நீதிபதியாக பணியாற்றி வருகிறார்.

2020ம் ஆண்டு ஓய்வுபெற உள்ள நீதிபதி சுதிர், கடந்த 2005ம் ஆண்டு அக்டோபர் 5ந்தேதி முதல் நேற்றுவரை  சுமார் 1 லட்சம் வழக்குகளை விசாரித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த 1 லட்சம் வழக்கறில், 10 ஆயிரம் வழக்குகள் லக்கோ உயர்நீதி மன்றத்தில் விசாரணை நடத்தி உள்ளார். இவர் லக்னோ நீதிபதியாக இருந்தபோதுதான் ராம ஜென்ம பூமி, பாபர் மசூதி வழக்கும் விசாரணைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், பிரபலமான ஜோதிஷ்பீத் பத்ரிகாஸ்ரமத்தின் சங்கராச்சார்யர் குறித்த வழக்கும் விசாரணைக்கு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதைத்தொடர்ந்து 2015ம் ஆண்டு அரசு பள்ளிகளில் தரம் மேம்பட அனைத்து அரசு ஊழியர்களும் தங்களது குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க வேண்டும் என உத்தரவிட்டார். உ.பி. அரசுக்கு உத்தரவிட்டார். இந்த உத்தரவு நாடு முழுவதும் அதிர்வலைகளை எற்படுத்தி பரபரப்பாக விவாதிக்கப்பட்டது.