சென்னை,

ட்டமன்றத்தில் குட்கா ஊழல் பேர விவாதத்தின்போது, தடைசெய்யப்பட்ட குட்காவை சட்ட மன்றத்திற்குள் கொண்டு சென்றது தொடர்பாக உரிமைக்குழு விசாரணைக்கு சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், சபாநாயகர் நடவடிக்கை எடுக்க சென்னை ஐகோர்ட்டு இடைக்கால தடை விதிதுள்ளது.

குட்கா விவகாரத்தில்  உரிமைக்குழு விசாரணை நடத்தி திமுக எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது.

இதற்கிடையில், குட்கா விவகாரத்தில் சபாநாயகர் தங்கள் மீது நடவடிக்கை எடுக்ககூடாது என திமுக சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, உரிமை மீறல் வழக்கில் எந்தவித நடவடிக்கையும் எடுக்க கூடாது என சபாநாயகர் தனபாலுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மேலும் இதுகுறித்து விளக்கம் அளிக்க சட்டமன்ற செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.