ராஞ்சி
நாளை மறுநால் ஜார்க்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரன் பதவியேற்க உள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தமுள்ள 81 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டுமுதற்கட்டமாக கடந்த நவம்பர் 13ம் தேதி, 43 தொகுதிகளுக்கும், 2வது கட்டமாக நவம்பர் 20ம் தேதி 38 இடங்களுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
அதன்படி ஜார்க்கண்ட்டில் ஆளும் கூட்டணி மொத்தமுள்ள 81 தொகுதிகளில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி 56 இடங்களை கைப்பற்றியது. ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா 34 இடங்களும், காங்கிரஸ் 16, ராஷ்டிரீய ஜனதாதளம் 4, மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு 2 இடங்கள் பெற்றன.
தேசிய ஜனநாயக கூட்டணி 24 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜக 21 இடங்கள், ஐக்கிய ஜனதாதளம், லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்), ஜார்கண்ட் மாணவர் யூனியன் கட்சிகள் தலா ஓரிடத்தில் வென்றன. தேர்தலில் வெற்றி பெற்றதை தொடர்ந்து ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன் நாளை மறுநாள் (முதல்வராக பதவியேற்பார் என தகவல் வெளியாகி உள்ளது.
இந்த விழாவில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட இந்திய கூட்டணியை சேர்ந்த முக்கிய தலைவர்கள் பங்கேற்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.