டெல்லி: பரபரப்பான பேச்சுவார்த்தைகள் முடிவில் சீன நாட்டு காவலில் இருந்து 10 இந்திய வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியா-சீனா நாட்டு ராணுவ ஜெனரல் மேஜர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் அடிப்படையில் லெப்டினண்ட் கர்னல், மூன்று மேஜர் உட்பட 10 பேர் நேற்று மாலை 5 மணிக்கு விடுவிக்கப்பட்டனர்.
அவர்களை சீன படையினர் துன்புறுத்தவில்லை என்று இந்திய ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன ராணுவத்துடனான மோதலில் 76 வீரர்கள் காயமடைந்ததாகவும், அதில் ஒருவர் கூட ஆபத்தான கட்டத்தில் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
காயமடைந்த வீரர்களில் 58 பேர் ஒரு வாரத்தில் பணிக்கு திரும்பி விடுவார்கள். மற்றவர்கள் 2 வாரங்களில் பணிக்கு திரும்ப வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 1962 சீன-இந்தியா போருக்குப் பிறகு இந்திய வீரர்கள் சீனத் தரப்பினரால் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.