சென்னை: நடிகர் விக்ரமுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழ் சினிமாவில் தனக்கென தனிபாதை அமைத்து, சிறந்த நடிகராக வலம் வருபவர் நடிகர் விக்ரம். இவர் நடிப்பில் கடைசியாக மகான் திரைப்படம் வெளியாக இருந்தது. இந்த நிலையில், விக்ரமுக்கு இன்று காலை  திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

இதையடுத்து, அவரது குடும்பத்தினர் அவரை  சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.  அவருக்கு நெஞ்சு வலி (மாரடைப்பு) ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.