டெல்லி: மகாகவி பாரதியார் கலாச்சாரம் மற்றும் தேசிய உணர்வை ஒளிரச் செய்தவர் என்று  அவரது பிறந்தநாளையொட்டி,  பிரதமர் நரேந்திர மோடி  புகழாரம் சூட்டியுள்ளார்.

நாடு முழுவதும் மகாகவி பாரதியாரின் பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த நிலையில், பிரதமர் மோடி, பாரதியாரைப் புகழ்ந்து தமிழில் பகிர்ந்துள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:

மகாகவி சுப்ரமணிய பாரதியின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன் . அவரது கவிதைகள் துணிவைத் தூண்டின, அவரது சிந்தனைகள் எண்ணற்ற மக்களின் மனதில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தும் ஆற்றலைக் கொண்டிருந்தன. இந்தியாவின் கலாச்சார, தேசிய உணர்வை அவர் ஒளிரச் செய்தார். நீதியான,  அனைவரையும் உள்ளடக்கிய ஒரு சமூகத்தை உருவாக்க அவர் பாடுபட்டார். தமிழ் இலக்கியத்தை செழுமைப்படுத்துவதில் அவர் ஆற்றிய பங்களிப்புகளும் ஒப்பிலாதவை.

இவ்வாறு கூறி உள்ளார்.

[youtube-feed feed=1]