சென்னை
சென்னை உயர்நீதிமன்றம் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ரூ. 1.10 கோடி நஷ்டஈடு வழங்க உத்தரவிட்டுள்ளது.
ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, சாலை விபத்தில் உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபால் சமீப காலமாக, கோடநாடு வழக்கு தொடர்பாக ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார்.சமூக வலைத்தளங்கலில் ந்த வீடியோக்கள்அதிக அளவில் பகிரப்பட்டது.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி பேச தனபாலுக்கு தடை விதிக்கக் கோரியும், ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் மான நஷ்ட ஈடு வழங்கக் கோரியும் முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்
மனுவில், கட்சியின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுள்ள நிலையில், தன் நற்பெயருக்கு களங்கம் கற்பிக்கும் வகையில், தனது அரசியல் எதிரிகளின் தூண்டுதலால், தனபால் பொய்யான தகவல்களை கூறி வருவதாக கூறப்பட்டுள்ளது.
எடப்பாடி பழனிசாமியின் வழக்கறிஞர் எஸ்.கார்த்திகைபாலன், எடப்பாடி பழனிசாமியின் சாட்சியத்தை பதிவுசெய்து, அதுகுறித்த அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதி டீக்காராமன், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி பேச தனபாலுக்கு தடை விதித்ததுடன், ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் மான நஷ்டஈடு வழங்கவும் தனபாலுக்கு உத்தரவிட்டுள்ளார்.